தாளிக்கிறேன்னு சொன்னது கமல், ஆனால் செய்தது வேறு ஒருவர்...

By Siva

சென்னை: ஓவராக ஆட்டம் போடும் மகத்தை கமல் ஹாஸன் லைட்டாக தடவிக் கொடுத்தாலும் நன்றாக தாளித்தார்.

பிக் பாஸ் 2 வீட்டில் மகத், ஐஸ்வர்யா செய்யும் அட்டூழியங்களை கமல் ஹாஸன் கண்டிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தான் மகத், யாஷிகா, ஐஸ்வர்யாவை கண்டிக்கப் போவதாக கூறி நேற்று மீசையை முறுக்கினார் கமல்.

சொல்லிவிட்டீர்கள் அல்லவா, தாளிச்சுடலாம் என்று கமல் கூறியதை கேட்டு பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

கமல்

கமல்

ஆண்டவர் எடுத்த எடுப்பில் தாளிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் நாமினேஷனின் போது யாஷிகா ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றினார் என்று கேட்டார் கமல். நட்பு என்று பார்த்தால் மகத்தையும், அன்பு என்று பார்த்தால் மும்தாஜையும் காப்பாற்றியிருக்க வேண்டும். இந்த இரண்டு 'பு'வையும் விட்டுவிட்டு ஐஸ்வர்யாவை ஏன் காப்பாற்றினீர்கள் யாஷிகா என்று கேட்டார் கமல்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவுக்கும், தனக்கும் இடையே நட்பு இருப்பதாகவும், கோபப்படுவது தப்பு என்று பலர் நினைப்பதாகவும் கமலிடம் ஐஸ்வர்யாவுக்கு வக்காலத்து வாங்கினார் யாஷிகா. ஐஸ்வர்யா ஒரேயொருமுறை தான் கோபப்பட்டு பேயாட்டம் ஆடியதாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார் யாஷிகா. ஐஸ்வர்யா கோபத்தை கட்டுப்படுத்தி முன்மாதிரியா இருப்பார். அதனால் அவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்தேன் என்றார் யாஷிகா.

மன்னிப்பு

மன்னிப்பு

கோபம் வந்தால் மன்னிக்கும் சலுகை எனக்கும் உண்டா என்று கேட்டார் கமல். சரி கமல் சார் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் மகத், ஐஸ்வர்யா, யாஷிகாவை தாளிக்கப் போகிறார் என்று பார்த்தால் வழக்கம் போன்று ஏமாற்றிவிட்டார். ஐஸ்வர்யாவை ஏதோ ஒன்று காக்கிறது என்கிறார் கமல். உங்களுக்கு தெரியாதா அது எந்த காக்கும் கரம் என்று?. இதுக்கு பெயர் தான் தாளிப்பதா ஆண்டவரே?

விளக்கம்

விளக்கம்

தலை கால் புரியாமல் ஓவராக ஆடும் மகத்திடம் போய் விளக்கம் கேட்டார் கமல். டேனி எழுந்து மகத் தன்னை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதையும், மும்தாஜை கேவலமாக பேசியதையும் கமலிடம் புகார் தெரிவித்தார். மகத் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தையும் கமலிடம் காண்பித்தார் டேனி. தாளிச்சது கமல் இல்லை டேனி தான். மகத் சும்மா சப்பை கட்டு கட்டிக் கொண்டிருந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

தாளிக்கிறேன் என்று நீங்கள் கூறியபோது உங்கள் முகத்தில் தெரிந்த அந்த கோபம் மகத்தை கண்டிக்கும்போது குறைந்துவிட்டது கமல் சார். நீங்கள் கண்டிக்கவில்லை என்று கூறவில்லை. ஆனால் இதை விட அதிகம் எதிர்பார்த்தோம் என்பதால் லைட்டாக ஏமாற்றமாகிவிட்டது. மகத்திடம் கருணை காட்ட வேண்டியது இல்லை என்பதே பார்வையாளர்களின் கருத்து சார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X