அழுகாச்சி வீடான பிக் பாஸ்: கமலையே கண் கலங்க வச்சுட்டாங்க
சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி அழுகாச்சியாக இருந்தது.
பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தாரை மிஸ் பண்ணுவதாக கூறி கதறி அழுதார்கள். எப்பொழுதும் ஜாலியாக இருக்கும் டேனி கூட அழுதார்.
அவர்கள் அழுதது குறித்து கமல் ஹாஸன் அவர்களிடம் கேட்டறிந்தார்.

தந்தை
பிக் பாஸ் வீட்டிற்கு வந்தபோது 16 பேரில் என் தந்தையை தேடினேன் என்று கூறி அழுதார் டேனி. 16 பேரில் தந்தையை தேடிய நீங்கள் 17வது ஆளான என்னில் ஏன் தேடவில்லை என்று கமல் டேனியிடம் கேட்டார்.

அழுகை
கமல் கூறியதை கேட்ட டேனி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். இதை பார்த்த யாஷிகா அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.
கடந்த வாரம் உங்களை பார்த்தபோது கூட எனக்கு அப்பா நினைவு தான் வந்தது கமல் சார் என்றார் டேனி.

நல்ல நிலமை
மகனே நீ நல்ல நிலைக்கு வந்துட்டடா என்று என் அப்பா கூறி நான் கேட்கவில்லையே என்பது வருத்தமாக உள்ளது என்றார் டேனி. அதற்கு கமலோ நீங்கள் பெரிய நிலைமைக்கு வந்துவிட்டீர்கள் என்று டேனியின் தந்தை ஸ்தானத்தில் இருந்து கூறினார்.

ஐஸ்வர்யா
இங்கு உள்ளவர்கள் எல்லாம் குடும்பத்தாரை நினைத்து அழுகிறார்கள். ஆனால் எனக்கு குடும்பமே இல்லை என்று கூறி அழுதார் ஐஸ்வர்யா. தனியாக இருப்பது கொடுமை என்றார்.

ஃபீலிங்
டேனி, ஐஸ்வர்யா ஆகியோர் அழுததை பார்த்து கமலுக்கு கண் கலங்கிவிட்டது. அழுவதை நினைத்து யாரும் வெட்கப்பட வேண்டாம். அதுவும் நல்லதே என்று ஆறுதல் கூறினார் கமல்.


Click it and Unblock the Notifications











