twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Bigg boss3 tamil: "நம்மவருக்கு".. நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு!

    |

    சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் என்று சொல்லலாம்.இருப்பினும் நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு வாரங்கள் ஆகியும், எந்த விதத்திலும் நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை என்பது வருத்தம்தான்.

    உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இதுவரை அவர் உட்கார்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவில்லை.பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸும், ப்ளீஸ் உட்காருங்கன்னு அவங்களை சொல்லியும் நீங்க நிக்கறீங்களே சார்ன்னு .ஒருத்தரும் சொல்லலை.

    அவர் உட்கார்ந்து நிகழ்ச்சியைத் தொகுத்தாலும், ஸ்டைலிஷா இருக்கும் என்கிற ஆதங்கத்தில் சொல்வதுதான் இது.மற்றபடி உலக நாயகனால் நிற்க முடியாதா என்ன? அவர் என்றும் இளமையானவர், அப்படியே உடலை மெயின்டெயின் செய்ப்பவரும்கூட!

    சரியான நேரத்தை

    சரியான நேரத்தை

    என்னடா இன்னும் தலைவர் ஒரு பொது கருத்தையும் பேசலையேன்னு கமல்ஹாசன் ரசிகர்கள் ஆதங்கத்தில் இருக்க, நேற்று ஒரு விமர்சனத்துக்காக தன்னிலையை அறிவித்தார் கமல்ஹாசன். மீண்டும் மீண்டும் என்று கேட்கும்படி இருந்தது அந்த தன்னிலை விளக்கம்.கமல் பேசினால் புரியலை புரியலைன்னு சொல்றாங்களே அது எதனால் என்பது இதுவரை கமல் ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். நம்மவரின் படங்கள், பெர்சனல் வாழ்க்கை இதை மறந்துவிட்டு, அவர் பேச்சை மட்டுமே கவனியுங்கள். எல்லாருக்கும் கமல் பேசுவது நன்றாகவே புரியும்.

    கமல் சார் சபாஷ்

    கமல் சார் சபாஷ்

    ஞாயிறு அன்று பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க கோட் சூட்டுடன் மிக அழகாக ஜம்மென்று வந்தார். வந்த உடனே, ரொம்ப சீரியஸான விஷயத்தை கையில் எடுத்து பேச ஆரம்பித்தார். ஆனால், விஷயம்தான் சீரியஸ், ஆனால் கமல் பேசிய விதம் மிக மிக மிக .கூல் கூல், சில்சில்லுன்னு இருந்தது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்டெலக்சுவல் கமல் ஹாசன் எதுக்கு நட த்தணும் என்பதுதான் விமர்சனம்.

    கமல்ஹாசன் இன்டெலக்சுவல்

    கமல்ஹாசன் இன்டெலக்சுவல்

    நடிகர் கமல்ஹாசன் ஒரு இன்டெலக்சுவல் பெர்சன். விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மட்டமான நிகழ்ச்சி. இதை கமல்ஹாசன் நடத்தலாமான்னு விமர்சனம் செய்து இருக்கிறார்களாம். இதுக் குறித்து விளக்கம் சொன்னார் கமல். அதாவது,என்னை இன்டலக்ஸுவல் நான் சொல்லகிட்டதே இல்லை. மக்களை நான் சந்திக்கஒரு நல்லமேடை என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் பிரிண்டிங் புத்தகம் வர ஆரம்பித்த நிலையில், இதை கண்டவர்களும் படிக்கக் கூடாது என்று ஒரு கருத்தை பரப்பினார்கள்.

    ஒரு கூட்டம்

    ஒரு கூட்டம்

    அதற்கு மட்டும் என்றே ஒரு கூட்டம் இருக்கிறது .அவர்கள் மட்டும்தான் போதனைகளை சொல்ல வேண்டும். புத்தகம் படித்து விட்டால், கண்டவர்களும் போதனை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள் என்கிற எண்ணத்தில் அப்படி சொன்னார்கள். ஆனால், ஒரு புத்தகத்தை படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இன்னும் இன்னும் என்று படித்தால் அறிவு வளரும். ஆனால்,அறிவு ஜீவியாக யாரும் ஆகிவிட
    முடியாது. இதுதான் உண்மை.

    அவன் நான் இல்லை

    அவன் நான் இல்லை

    நான் அறிவு ஜீவியில்லை. அதை பொறுத்த வரையில், அதாவது கற்றுக் கொல்வதைப் பொறுத்தவரையில் நான் அன்றாடங் காய்ச்சிதான். இன்றும் இந்த நிமிஷம் வரைக்கும் மக்களோடு மக்களாக இருந்து கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் இன்டெலக்சுவலா என்று கேட்டால், இல்லை நான் மக்கள் பக்கம்தான், தினமும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன் என்று சொல்லவே விருப்பப்படுகிறேன் என்று சொன்னார்.

    கமல் சொல்வது உண்மைதானே.. கற்றது கையளவு... கற்க வேண்டியது கடலளவு என்று முன்னோர்களே சொல்லிவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.

    English summary
    Vijay TV's Bigg Boss show can be called a super hit. In the show hosted by world hero Kamal Haasan, he has not yet sat down and hosted the show. Even if he sat down and compiled the show, it would be stylistic. He's the youngest, and so is the body's mainstay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X