எப்படியும் வெல்லக்கூடாது.. இப்படிதான் வெற்றி பெற வேண்டும்.. ஹவுஸ்மேட்ஸ்களை கண்டிக்கும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கும் முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக சந்தித்து வருகிறார். அப்போது பிக்பாஸ் வீட்டில் வாரம் முழுவதும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விவாதிப்பார்.
அந்த வகையில் சனிக்கிழமையான இன்று நடிகர் கமல்ஹாசன், ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கவுள்ளார். இதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

தியாகத்துக்கு ரெடி
அதில் தோன்றியுள்ள நடிகர் கமல்ஹாசன், ஆர்வம் குறைஞ்சிடுச்சுங்க, சலிப்பா இருக்குங்க, தியாகத்துக்கு ரெடி அப்படின்னு சொன்னவங்கள்லாம் ரொம்ப தீவிரமா விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

சொல்லும் நேரம் இது
வெற்றி முக்கியம்தான், எப்படியாவது வெற்றி அப்படிங்கிறது ஒரு முறை, இப்படிதான் வெல்வேன் என்று ஒரு லட்சியத்தோடு வெல்பவர்களும் இருக்கிறார்கள். இதில் இரண்டாவதுதான் சிறந்தது என்பதை எடுத்துச்சொல்லும் நேரம் இது என்கிறார் கமல்.

கவின் தியாகம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்காக தியாகம் செய்யப்போவதாக லாஸ்லியா கூறினார். தர்ஷன், சாண்டி, லாஸ்லியா, முகென் ஆகியோருக்காக தான் தியாகம் செய்யப் போவதாக கவின் கூறினார். ஆனால் இவையெல்லாம் நடிப்பு, சிம்பத்தி வாக்குகளை பெறவே இப்படி பேசுகின்றனர் என்ற கருத்து எழுந்து வருகிறது.

இன்று தெரிந்துவிடும்
பிக்பாஸ் வீட்டில் இதுவரை சேரன், முகென் மற்றும் ஷெரின் மட்டுமே நேர்மையாக விளையாடுவதாக தெரிகிறது. ஆனால் கமல் யாரை வைத்து இப்படி சொன்னார் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











