நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்ட கமல் ஹாஸன்?
சென்னை: பார்வையாளர்களாகிய நமக்காக பிக் பாஸை பகைத்துக் கொண்டாரா கமல் ஹாஸன்?
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதி வாரத்தை நெருங்கிவிட்டது. இன்று யாஷிகா, தாடி பாலாஜி ஆகியோர் வெளியேற்றப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த சீசனை போன்று இல்லாமல் இந்த சீசன் போட்டியாளர்களிடையே ஒற்றுமை இல்லை.

காயம்
கடந்த வார டாஸ்கின் போது போட்டியாளர்களுக்கு அடிபட்டது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார் கமல். மாத்தி யோசித்து விளையாடிய விஜயலட்சுமியை கமல் பாராட்டினார். தனக்கு காயம் ஏற்பட்டது வெளியே தெரியவில்லை என்று ஐஸ்வர்யா கூறியதற்கு நல்லது என்று கூறி சிரித்தார் கமல். உடனே பார்வையாளர்கள் கைதட்டிய சத்தம் கேட்டு ஐஸ்வர்யாவுக்கு நோஸ்கட் ஆகிவிட்டது.

சந்திப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் சந்தித்துக் கொள்கிறீர்களா என்று முன்னாள் போட்டியாளர்களிடம் கேட்டேன். ஆமாம், வார வாரம் மற்றும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் சந்திக்கிறோம் என்றார்கள். ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் வெளியே சென்றால் சந்தித்துக் கொள்வார்களோ என்று பயமாக உள்ளது என்றார் கமல். அந்த அளவுக்கு போட்டியாளர்களிடையே வெறுப்பு உள்ளது.

கமல்
வெளியே வா பார்த்துக் கொள்கிறேன் என்று பேய் போன்று முகத்தை வைத்துக் கொண்டு ஐஸ்வர்யா மிரட்டியதை கமல் ஹாஸனும் பார்க்கத் தவறவில்லை. பெயரை சொல்லாமல் வெளியே வா பார்த்துக் கொள்கிறேன் என்றாரே ஒருவர் பார்வையாளர்களும் அதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று உண்மையை சொன்ன கமலை பாராட்டியே ஆக வேண்டும்.

பிக் பாஸ்
ஏற்கனவே ஒரு முறை கமல் பிக் பாஸின் செல்லமான ஐஸ்வர்யாவை பயங்கரமாக கண்டித்தார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியிலும் தொடர்ந்து நோஸ்கட் கொடுத்தார். இதை எல்லாம் பார்த்து பிக் பாஸ் கோபப்படுவார் என்பது கமலுக்கு தெரியாதா என்ன?. இருப்பினும் பார்வையாளர்களுக்காக செய்திருக்கிறார் போன்று.

குறும்படம்
கமல் ஹாஸன் ஐஸ்வர்யாவை கண்டித்த பிறகு பிக் பாஸ் குறும்படங்கள் போட்டு தனது செல்லக்குட்டி ரொம்ப நல்லவர் என்பது போன்று சீன் போட்டு உலக நாயகனை அசிங்கப்படுத்தினார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவுக்கு நோஸ் கட் கொடுத்து பிக் பாஸுக்கு பதிலடி கொடுத்துவிட்டாரோ கமல்?


Click it and Unblock the Notifications











