பிரதீப் ஆண்டனி பெயர் டோட்டல் டேமேஜ்.. பெண்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றுகிறேன் என விளாசிய கமல்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலருடன் அவர் சண்டை போட்டு வந்தாலும், அதற்கெல்லாம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவில்லை.

பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்தினால் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

Kamal Haasan eliminates Pradeep Antony with Women safety card

கடந்த சீசனில் அசீமுக்கு ரெட் கார்டு காட்டினார், கொடுக்கமாட்டார். அதே போல முரட்டுத்தனமாக கேம் ஆடலாம் என நினைத்து வந்த பிரதீப் ஆண்டனிக்கு தக்க பாடத்தை புகட்டி உள்ளனர்.

பிரதீப் ஆண்டனி வெளியேற்றம்: பிக் பாஸ் வீட்டில் இருந்து உதவி இயக்குநரும் நடிகருமான பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டுள்ளார். அருவி, வாழ் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் ஆண்டனி இந்த சீசன் டைட்டிலை வின் பண்ணுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பாதி நாட்கள் கூட தாண்டாமல் அவுட் ஆகி உள்ளார்.

செங்கோடி ஏந்திய பெண்கள்: பிக் பாஸ் வீட்டின் பெண் போட்டியாளர்களான ஜோவிகா, பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, ஐஷு, மாயா உள்ளிட்ட பல பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி வெளியேற வேண்டும் என செங்கோடி ஏந்தி கமல்ஹாசனிடம் புகார் அளித்த நிலையில், சனிக்கிழமை நிகழ்ச்சியிலேயே அதிரடியாக பிரதீப் ஆண்டனியை வெளியேற்றி விட்டார்.

வீட்டிலும் நாட்டிலும்: பெண்கள் பாதுகாப்புக்காகத்தான் பிரதீப் ஆண்டனியை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறேன் என்றும் வீட்டிலும், நாட்டிலும் பெண்கள் பாதுகாப்புத் தான் முக்கியம் அதை நான் கடைபிடிப்பேன் என கமல் சார் அரசியல் ஆதாயத்துடன் பேசி ஸ்கோர் செய்துள்ளார். தனலட்சுமியை அசீம் தொடக் கூடாத இடத்தில் தொட்டு விட்டார் என புகார் எழுந்த போது மட்டும் கமல் அவரை வெளியேற்றவில்லையே? ஏன் என்கிற கேள்வியை பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

நிர்வாகம் தந்த அனுமதி: கமல் சொன்னாலும், பிக் பாஸ் டீம் மற்றும் விஜய் டிவி அனுமதி அளித்த நிலையில், தான் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் கமல் தெளிவுப்படுத்தி உள்ளார். போன சீசனில் அது நடைபெறவில்லையா? என்கிற கேள்வியும் கிளம்பி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெயரை டோட்டலாக கெடுத்துக் கொண்டு ரெட் கார்டு வாங்கிய போட்டியாளராக பிரதீப் ஆண்டனி மாறி உள்ளார். இந்த சீசன் டைட்டில் அப்போ விசித்ராவுக்கா? ஜோவிகாவுக்கான்னு தெரியலையே பாஸ்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X