அடேங்கப்பா.. ஆளுக்கொரு வீடு கொடுத்த ஆண்டவர்.. பிக் பாஸ் தமிழ் 7ல் நடந்த அதிசயம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெற்றியாளர் ஒருவருக்கு மட்டுமே 50 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பை பட்டுமே பரிசாக வழங்கப்படும். ஆனால், அதை தாண்டி இறுதிப்போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் ஒரு பரிசு கொடுப்பார். இந்நிலையில், இந்த சீசனில் பிக் பாஸ் ஃபைனலிஸ்ட் போட்டியாளர்கள் 5 பேருக்கும் கமல்ஹாசன் ஆளுக்கொரு வீடு பரிசாக கொடுத்துள்ளார்.

கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் 106வது நாளில் போட்டியாளர்கள் 5 பேரும் ஃபைனலிஸ்ட்டுகளாக இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக என்ட்ரி கொடுத்தார் கமல்ஹாசன். ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு வழியனுப்பிய பின்னர் 5 போட்டியாளர்களுடன் பேசினார்.

Kamal Haasan gifts Bigg Boss 7 miniature houses to Top 5 Finalists

டாப் 5 போட்டியாளர்கள்: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கிராண்ட் ஃபினாலே வரை வீட்டில் தாக்குப் பிடித்தவர்கள் மாயா, அர்ச்சனா, மணி, விஷ்ணு மற்றும் தினேஷ். கமல்ஹாசனை பார்த்ததும் ஹேப்பியான அவர்கள் அவரது காலில் விழுந்து வணங்கி வரவேற்றனர். பிக் பாஸ் வீட்டுக்குள் சுற்றிப் பார்த்து விட்டு போட்டியாளர்களின் அனுபவத்தை கேட்டறிந்தார் கமல்ஹாசன்.

பிரத்யேக புத்தகம் பரிசு: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் கமல்ஹாசன் ஒரு பரிசு அளித்து வருகிறார். இந்நிலையில், இந்த சீசன் போட்டியாளர்களுக்கு பிரத்யேகமாக அவர்கள் போட்டோ போட்ட அவர்களை பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது. மேலும், கமல்ஹாசன் தனது கைப்பட முதல் பக்கத்தில் கையெழுத்திட்டு போட்டியாளர்களுக்கு பரிசாக வழங்கினார்.

5 பேருக்கும் 5 வீடுகள்: அந்த பரிசு மட்டுமின்றி இறுதிப்போட்டியாளரான 5 பேருக்கும் கமல்ஹாசன் 5 மினியேச்சர் வீடுகளை பரிசாக வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதுவரை எந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இல்லாத அளவுக்கு பிக் பாஸ் வீட்டின் பிரத்யேக செட்டை ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கமல் பரிசாக வழங்கினார். அந்த வீட்டுக்குள் லைட் வசதியெல்லாம் இருப்பதை பார்த்து போட்டியாளர்கள் 5 பேரும் ஹேப்பியாகி விட்டனர்.

பாராட்டு: இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே என்னை பொறுத்தவரையில் வெற்றியாளர் தான் அனைவருக்கும் பாராட்டுக்கள். விரைவில் மேடையில் சந்திக்கிறேன் என சொல்லி விட்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X