Pradeep Antony: பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி வெளியேற்றமா? ரெட் கார்டு கொடுத்த கமல்!
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அன்ன பாரதி வெளியேறுவதாக தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அதிரடியாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7ன் டைட்டில் வின்னரே பிரதீப் ஆண்டனி தான் என இணையத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பிஆர் டீம் அவரை மாஸ் ஹீரோவாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்த நிலையில், டாய்லெட்டில் டோர் கூட சாத்தாமல் உட்கார்ந்து இருந்ததாக புகார்கள் கிளம்பிய நிலையில், தற்போது அதிரடியாக அதற்கு கமல் பெரிய தண்டனையை கொடுத்துள்ளார் என ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

ரெட் கார்டு: பிரதீப் ஆண்டனி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து அதிரடியாக வெளியே அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்காமல் இருந்து வந்த நிலையில், அதன் டிஆர்பியை ஏற்ற திடீரென ஒரு எலிமினேஷன் எப்போதும் இப்படி பரபரப்பை கிளப்பும் அதே போல இந்த முறை பிரதீப்பை பலியாடாக ஆக்கி விட்டார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இரண்டாவது ப்ரோமோவில் சம்பவம்: ஜோவிகா, பூர்ணிமா ரவி, நிக்சன், மணிகண்டன் மற்றும் ரவீனா தாஹா என பிக் பாஸ் வீட்டில் உள்ள பலர் கையில் செங்கோடியை ஏந்திக் கொண்டு பிரதீப்புக்கு எதிராக புகார் அளிக்க அதை பார்த்த கமல்ஹாசன் இதற்கு உரிய தண்டனையை கொடுத்து விடலாம் என அதிரடியாக பேசும் ப்ரோமோ வெளியானது.
எலிமினேஷனா?: ரெட் கார்டு கொடுத்து ஏதாவது பனிஷ்மென்ட் இருக்குமா? அல்லது எலிமினேஷனா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சியை இதற்காகவே ரசிகர்கள் பார்க்க காத்திருக்கின்றனர். ஷூட்டிங் முடிந்த உடன் பிரதீப்புக்கு என்ன ஆனது என்கிற தகவல்களும் வெளியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











