தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் திருடுவது பழகிப் போச்சு: பன்ச் விட்ட கமல்
சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் பேசிய அரசியல் பன்ச் வசனம் பலரையும் கவர்ந்துவிட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் அரசியல் வசனங்கள் பேசுவது அனைவருக்கும் தெரியும். அவர் என்ன பன்ச் விடப் போகிறாரோ என்பதை தெரிந்துகொள்ளவே பலர் வார இறுதி நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் ஃபுல் ஃபார்மில் இருந்தார்.

கமல்
திருட்டுக் கிழவி என்று ரேஷ்மாவை பற்றி பேசினார் கமல். அப்பொழுது அவர் தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் திருடுவது பழகிப் போன ஒரு விஷயம் தான் என்று தனக்கே உரிய பாணியில் பன்ச் விட்டார். இதை வேறு யாராவது பேசினால் ரேஷ்மாவை பற்றி மட்டும் தான் பேசுகிறார் என்று நினைக்கலாம். ஆனால் கமல் ஹாஸன் பேசியதால் அவர் நிச்சயம் அரசியலை மனதில் வைத்து தான் பேசியுள்ளார் என்று நம்புகிறார்கள் பார்வையாளர்கள். தலைமைப் பொறுப்பில் இருந்து திருடியதைக் கூட ரசிக்கும்படியாக செய்துவிட்டீர்கள் என்று ஒரு செம ஃபினிஷிங் டச் கொடுத்துவிட்டார் கமல்.

பிக் பாஸ்
அரசியலுக்கு வரும் முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பன்ச் வசனம் பேசி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார் கமல். தான் சொல்ல விரும்புவதை இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் எளிதில் சொல்லிவிடுகிறார். அரசியலுக்கு வருவதற்கு முன்பே வந்து பார் என்று கூறும் கமல் நேற்று அப்படி பேசியதில் ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் பார்வையாளர்கள்.

உலக நாயகன்
நேற்றைய நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் மீரா மிதுனை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியது பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆண்டவர் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். இந்த சீசனிலேயே நேற்று தான் கமல் ஹாஸன் சிறப்பாக பேசினார், சான்சே இல்லை என்று பார்வையாளர்கள் கமலை பாராட்டியுள்ளனர்.

சாண்டி
கமலை பாராட்டிய பார்வையாளர்களுக்கு அவர் மீது ஒரு வருத்தமும் உள்ளது. அதாவது கமல் சாண்டி மாஸ்டருக்கு ஆதரவாக செயல்படுவதாக பார்வையாளர்கள் நினைக்கிறார்கள். சாண்டி காமெடி என்கிற பெயரில் அடுத்தவர்களை கேவலமாக கிண்டல் செய்வதை கமல் ஹாஸன் ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று பார்வையாளர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











