ரஜினி இல்ல கமல் வழி தான் தனி வழி: ஏன் தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த் அல்ல கமல் ஹாஸன் வழி தான் தனி வழி ஆகும்.
தலைப்பை பார்த்துவிட்டு ரஜினி ரசிகர்கள் கொந்தளிக்க வேண்டாம். ரஜினி படத்தில் பேசிய பன்ச் வசனத்தை செயலில் காட்டி வருகிறார் கமல் ஹாஸன். கமல் டிவி நிகழ்ச்சியில் வந்தாலும் சரி, ட்விட்டரை பயன்படுத்துவதாக இருந்தாலும் சரி, மீடியாவை சந்திப்பதாக இருந்தாலும் சரி அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்.
அவர் மீடியாவை சந்திக்கும்போது எல்லாம் பிரச்சனையில் சிக்குவது இல்லை.

பிக் பாஸ்
முழு நேர அரசியலில் ஈடுபட வசதியாக கமல் ஹாஸன் படங்களில் நடிப்பதை நிறுத்துகிறார். இந்தியன் 2 படத்தோடு அவர் இனி படங்களில் நடிக்க மாட்டார். இந்நிலையில் அவர் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்துள்ளார்.

ப்ரொமோ
பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கான ப்ரொமோ ஷூட் பூந்தமல்லியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்துள்ளது. அதில் கமல் ஹாஸன் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து 3வது முறையாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசன் ஜூன் 2வது வாரத்தில் துவங்கும் என்று கூறப்படுகிறது.

மக்கள்
அரசியல் கட்சி துவங்கும் முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் சொல்ல விரும்பிய கருத்துகளை மக்களிடம் எளிதில் கொண்டு சென்றார் கமல். அதனால் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவங்கிய பிறகும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சம்மதித்திருப்பார். கட்சி துவங்கும் முன்பே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கருத்து மழை பொழிவார், இப்போ சொல்லவா வேண்டும். நீங்க நடத்துங்க ஆண்டவரே.

அரசியல் கருத்துகள்
மீடியாவை, பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சூச்சமம் தெரிந்து வைத்துள்ளார் கமல். அதனால் இம்முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் என்ன கருத்து எல்லாம் சொல்லப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எந்த மொழியிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் கமல் போன்று அரசியல் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











