கமல் வேற லெவல்: லாஸ்லியாவை பொசுக்குன்னு அசிங்கப்படுத்திட்டார்
சென்னை:பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸனிடம் அசிங்கப்பட்டுள்ளார் லாஸ்லியா.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த புதிதில் அப்பாவி போன்று இருந்த லாஸ்லியா தற்போது கவினை காதலிக்கிறார். அதே கவினை சாக்ஷியும் காதலிக்கிறார். இது என்னடா கருமம் புடுச்ச காதல் என்று நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதலை பார்த்து கமல் ஹாஸனே கடுப்பாகியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கமல்
கமல் ஹாஸனை பார்த்து லாஸ்லியா, நான் த்ரிஷா, நாம் சேர்ந்து மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளோம். நீ நீல வானம் பாடலில் நடித்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்க என்று கேட்டார். அதற்கு கமலோ, இன்னும் அந்த காதல் மூடில் இருந்து வெளியே வரவில்லை என்பது தெரிகிறது என்று கூறி நோஸ்கட் கொடுக்கும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கைதட்டல்
முன்பெல்லாம் லாஸ்லியாவை திரையில் பார்த்த உடனே பிக் பாஸ் அரங்கில் இருக்கும் பார்வையாளர்கள் கை தட்டி, விசில் அடித்து செம வரவேற்பு கொடுப்பார்கள். தற்போது எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள். கமல் லாஸ்லியாவை கலாய்த்தபோது தான் பார்வையாளர்கள் கை தட்டினார்கள். இப்பொழுதாவது சுதாரித்துக்கொள்ளுங்கள் லாஸ்லியா.

ஜானு
டாஸ்கின் போது லாஸ்லியா 96 பட ஜானு போன்று கெட்டப் போட்டது பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. போயும் போயும் இந்த லாஸ்லியா தான் ஜானுவா என்று கேட்டு சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்தனர். லாஸ்லியாவை க்யூட், அழகு என்று புகழ்ந்தவர்கள் கூட தற்போது அவர் முகத்தை பார்த்தால் எரிச்சல் அடைகிறார்கள். அந்த அளவுக்கு லாஸ்லியாவின் நிலை மோசமாகிவிட்டது.
மொக்கை
பிக் பாஸே ரூம் போட்டு கஷ்டப்பட்டு யோசித்து ஒரு ப்ரொமோ வீடியோ வெளியிட்டால் அது மொக்கையாக இருப்பதாக கூறுகிறார்கள் பார்வையாளர்கள். சமூக வலைதளங்களில் மக்கள் லாஸ்லியாவை திட்டிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு ப்ரொமோ வீடியோவை உருவாக்கியுள்ளார்கள் போன்று.


Click it and Unblock the Notifications











