twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?: ஷோக்கா பதில் சொன்ன கமல்

    By Siva
    |

    சென்னை: அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்று கமல் அருமையாக விளக்கம் அளித்துள்ளார்.

    வார இறுதி நாட்கள் வந்தால் கமல் ஹாஸனை பார்க்கலாம் அவர் பேசும் அரசியலை கேட்கலாம் என்ற ஆவலில் பலரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.

    நேற்றைய நிகழ்ச்சியில் இந்தியன் 2 படத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பது குறித்து பேசினார் கமல்.

    இந்தியன் 2

    இந்தியன் 2

    இந்தியன் 2 படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன் என்பது போன்று சொல்லியிருக்கிறீர்கள்...என்று நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடியின் அக்கா ப்ரியதர்ஷினி தனது கேள்வியை முடிக்கும் முன்பு கமல் கூறியதாவது, அப்படி சொல்லிக்கிட்டு இருக்காங்க. காலம் தான் அதை முடிவு செய்யும். அதை இங்கே சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அப்போ நீங்க முழு நேர அரசியல்வாதியாக மாட்டீர்களா என்று கேட்கிறார்கள். முழு நேர அரசியல்வாதி யார் என்று முதலில் எனக்கு சொல்லுங்கள் என்று கமல் கூறினார்.

    கலைஞன்

    கலைஞன்

    நான் முழு நேர மனிதன். பிற்பாடு தான் கலைஞன். எனக்கு வாழ நேரம் வேண்டும். பிறகு என் வேலையை செய்வேன். அரசியல்வாதியும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவருக்கு என்று ஒரு வாழ்க்கை, அவருக்கு என்று ஒரு தொழில் இருந்திருக்க வேண்டும். அதை எல்லாம் விட்டுவிட்டு தியாகம் செய்வது என்பது வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் முன் அடி எடுத்து வைத்தாலே தங்கள் வாழ்க்கை பாழாகிவிடும் என்று நினைத்தவர்கள் செய்த தியாகம். இப்போ அது தேவையில்லை என்று கமல் தெரிவித்தார்.

    தியாகம்

    தியாகம்

    நாம் நாட்டுக்காக செய்யும் கடமைக்காக தியாகம் செய்வது போன்று நடிக்க வேண்டியது இல்லை என்பது என்னுடைய கருத்து. எல்லாத்தையும் துறந்துவிட்டு வர இது துறவு அல்ல ஒரு துறை. மக்களுக்காக வேலை செய்ய வந்திருக்கிறோம். அதில் என்னையும் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு மிஞ்சி தான் தான தர்மம் என்று சொல்லவில்லை. எனக்கும் கொஞ்சம் மிஞ்ச வேண்டும். எல்லா அரசியல்வாதியும் அப்படித் தான் இருக்க வேண்டும் என்றார் கமல்.

    சமூகம்

    சமூகம்

    பிக் பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை தாண்டி அதற்கும் நம் சமூகத்திற்கும் என்ன தொடர்பு என்று பார்வையாளர் ஒருவர் கேட்டார். அதற்கு கமல் ஹாஸன் நேரடியாக பதில் அளிக்காமல் நலுங்கு பற்றி விளக்கமாக பேசினார். எல்லா விளையாட்டிலும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதை அர்த்தமுள்ளதாக செய்ய வேண்டியது அதை ஏற்பாடு செய்பவர்களின் கடமை என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கும் இந்த கேம் ஷோவுக்கும் கண்டிப்பாக சம்பந்தம் இருக்கிறது. அந்த சாயல் தெரிவதால் தான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், உத்வேகம் குறையாமல் என்றார். ஆனால் அவர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை.

    English summary
    Kamal Haasan has made it clear that even a politician has a life of his own and there is no need to sacrifice that for politics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X