பிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா?: கமல் 'பலே' பதில்
சென்னை: பிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டுமே பயன்படுத்துகிறீர்களா என்று பார்வையாளர் ஒருவர் கமல் ஹாஸனிடம் கேட்டார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் வார இறுதி நாட்கள் வந்தால் கமல் ஹாஸனை பார்க்கும் ஆவலில் பலர் டிவி முன்பு வந்து அமர்கிறார்கள். வாரா வாரம் கமல் அரசியல் பேசத் தவறுவது இல்லை.
இந்த வாரமும் நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே அரசியல் பேசினார் கமல்.

கமல்
கமல் ஹாஸன் என்ன உடை அணிந்து எப்படி வருகிறார் என்பதை பார்க்க ஆவலாக காத்திருந்தால் அவர் ஏற்கனவே வந்து பார்வையாளர்களுடன் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தார். இந்த சனிக்கிழமை கலர்ஃபுல்லாக வந்திருந்தார் கமல். அரைக் கிணறு தாண்டிட்டாங்கன்னு சொல்வாங்க அது மாதிரி இது மூன்றில் ஒரு பங்கு கிணறை தாண்டிட்டாங்கன்னு சொல்லலாம். தாண்டினார்களா, தாண்டிய மாதிரி தெரியவில்லை, தங்கிட்டாங்க என்றார்.

தாண்டவில்லை
பார்வையாளர் ஒருவரோ, தாண்டிட்டாங்க என்றோ தங்கிட்டாங்க என்றோ சொல்ல முடியாது. உள்ளே சிலர் தங்குவதற்கே சிரமப்படுகிறார்கள். சிலர் தாண்டுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அன்பில் முங்க வேண்டியவர்கள் சண்டையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என கமலிடம் கூற அவரும் மிகச் சரி என்றார்.

எதிரிகள்
பார்வையாளரின் கருத்தை கேட்ட கமலோ, போட்டியாளர்கள் திடீர் என்று எதிரியாகிறார்கள், திடீர் என்று நண்பர்களாகின்றார்கள், திடீர் என்று கொஞ்சிக் குழவுகிறார்கள், திடீர்னு கொந்தளிக்கிறார்கள். வேறு துறையில் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கும்னு சொல்வாங்க. நான் சினிமாவை சொல்லலீங்க என்று கமல் கூறியதும் பார்வையாளர்கள் சிரித்தார்கள். அவர் கூறியது அரசியல் என்பது நமக்கு தெரியாதா என்ன?

கேள்வி
பிக் பாஸ் மேடையை பிக் பாஸுக்காக மட்டும் தான் பயன்படுத்துகிறீர்களா என்று பார்வையாளர் ஒருவர் கமலிடம் கேட்டார். அதற்கு அவரோ, பிக் பாஸ் என்னை பயன்படுத்துகிறார். நான் இந்த சந்தர்ப்பத்தை உங்களுடன் அளவளாவதற்கு பயன்படுத்திக் கொள்கிறேன் என்றார். இந்தியன் 2 பற்றிய கேள்விக்கு, இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அது துவங்கும் என்று பதில் அளித்தார் கமல்.

போட்டியாளர்
ஒயில் கார்டு என்ட்ரி எப்பொழுது என்று கமலிடம் கேட்கப்பட்டது. ஒயில்டு கார்டு என்ட்ரி உண்டு, ஆனால் எப்பொழுது என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றார். இந்த சீசனில் யார் யார் எல்லாம் ஒயில்டு கார்டு மூலம் வரப் போகிறார்களோ? கடந்த சீசனில் பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், காஜல் பசுபதி ஆகியோர் ஒயில்டு கார்டு மூலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications