தன் மீது சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கும் ஒரே நாளில் பதில் அளித்த கமல்

By Siva

Recommended Video

பிக் பாஸ் 2 பற்றி மக்கள் அறியாத ரகசியங்கள்- வீடியோ

சென்னை: சனிக்கிழமை மட்டும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பல அதிசயங்கள் நடந்துள்ளது.

பிக் பாஸ் 2 வீட்டில் கமல் ஹாஸனையே போலியாக கோபப்பட வைத்துவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. மேலும் மகத், ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோர் என்ன அட்டூழியம் செய்தாலும் கமல் கண்டுகொள்ளவது இல்லை என்ற புகார் எழுந்தது.

இந்த இரண்டுக்கும் சனிக்கிழமை நிகழ்ச்சியில் பதில் அளித்தார் கமல்.

கண்டிப்பு

கண்டிப்பு

சனிக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் உண்மையாகவே கோபப்பட்டார். மேலும் மகத், யாஷிகா, ஐஸ்வர்யாவை தாளிச்சு எடுத்தார். அந்த மூன்று பேரையும் பாரபட்சம் இல்லாமல் வறுத்தெடுத்தார் கமல். மகத், யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரை கமல் இந்த அளவுக்கு கண்டித்தது இதுவே முதல் முறை ஆகும்.

மும்தாஜ்

மும்தாஜ்

கமல் ஹாஸன் வாரா வாரம் மும்தாஜை டார்கெட் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை மும்தாஜை பாராட்டித் தள்ளினார் கமல். மகத் அந்த அட்டகாசம் செய்தும் மும்தாஜ் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் பொறுமையாக இருந்ததை பாராட்டினார் கமல். கமல் பாராட்டியதை கேட்டு பார்வையாளர்கள் கைதட்டினார்கள். கமல் மும்தாஜை பாராட்டியதும் முதல் முறை.

நிகழ்ச்சி

நிகழ்ச்சி

தாளிச்சிடலாம் என்று கமல் ப்ரொமோவில் கூறியதை பார்த்தபோது அவர் மீது நம்பிக்கை வரவில்லை. காரணம் ப்ரொமோவில் ஒன்றை காட்டிவிட்டு நிகழ்ச்சியில் சப்பையாக ஏதாவது காட்டி ஏமாற்றுவது பிக் பாஸுக்கு வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் தான் ப்ரொமோவில் கூறியது படியே கமல் தாளிச்சுட்டார். ப்ரொமோவில் ஒன்று காட்டி நிஜத்தில் வேறு காட்டி ஏமாற்றாததும் இதுவே முதல் முறை.

பாராட்டு

பாராட்டு

பிக் பாஸ் முதல் சீசனில் இருந்தவர்களின் அறிவு மட்டம் அதிகம் என்றும் தற்போது உள்ளவர்களுக்கு அப்படி இல்லை என்றும் கமல் தெரிவித்தார். முதல் முறையாக போட்டியாளர்களின் அறிவு மட்டம் பற்றி எல்லாம் விமர்சித்திருக்கிறார். மனிதர் அந்த அளவுக்கு கோபத்தில் இருந்துள்ளார் போன்று. தன் மீதான அனைத்து புகார்களுக்கும் ஒரே நாளில் பதில் அளித்துவிட்டார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X