பிக்பாஸில் கண்ணீர்விட்ட கமல்.. அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்... ஏன் தெரியுமா?
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் கண்ணீர் விட்டு குரல் தழுதழுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியாக ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்தார். அப்போது ஹவுஸ்மேட்ஸ்கள் அனைவரும் கடந்த வாரம் டாஸ்க்கின் போது இருந்த கேரக்டர்களை தொடர்ந்தனர்.
அதாவது கடந்த வாரம் கொடுக்கப்பட்ட போடு ஆட்டம் போடு டாஸ்க்கின் போது ஒவ்வோருவருக்கும் ஒரு நடிகர் நடிகையாக இருக்குமாறு பிக்பாஸ் அறிவுத்தியிருந்தார். அதன்படி அந்த கேரக்டர்களாக கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டனர் ஹவுஸ்மேட்கள்.

யாராக வருவீர்கள்
விஜயகாந்தாக சரவணன், விஜயாக முகென், சிம்புவாக சாண்டி, அஜித்தாக கவின், சரோஜா தேவியாக மதுமித உள்ளிட்டோர் கேள்வி கேட்டனர். அப்போது விஜயாக இருந்த முகென், பிக்பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்றால் யாராக வருவீர்கள் என்று கமலிடம் கேட்டார்.

தர்ஷனாக விரும்பிய கமல்
அதற்கு பதிலளித்த கமல், தர்ஷனாக வர விரும்புகிறேன் என்றார். இதனால் கரவொலியில் அதிர்ந்தது அரங்கம். இதைத்தொடர்ந்து பேசிய கமல், பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் கமலாக வந்துவிட்டார். என்ற அவர் தெனாலி படம் வருவதற்கு முன்பே தர்ஷன் தெனாலியாக இருந்தவர் என்று கூறினார் கமல்ஹாசன்.

கண் கலங்கி குரல் தழுதழுத்து
மேலும் ஈழம் குறித்தும் இலங்கையில் ஈழத் தமிழர்கள் பட்ட வேதனை குறித்தும் மறைமுகமாக பேசிய கமல், கண் கலங்கினார். பேசும் போது அவரது குரல் தழுதழுத்தது. சில நொடிகள் அமைதியாக இருந்தார்.

ஆர் யூ ஓகே சார்?
இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சியாயினர். இதைத்தொடர்ந்து சாவித்திரியாக கேள்வியை தொடங்கிய அபிராமி, ஆர் யூ ஓ சார் என்று அவர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டாரா என்று உறுதி செய்தார். கமல் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டது பார்வையாளர்களிடையெ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











