இவங்களுக்கு ஆர்மி ஒரு கேடான்னு கேட்கிறாரோ கமல்?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 62 : Kavin-னுக்காக Special குறும் படம்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்களை இன்று சந்திக்கும் கமல் உள்ளே இருப்பவர்கள் படைக்கு தலைமை ஏற்கும் உணர்வை இழந்துவிட்டார்கள் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ அனைவருக்கும் அவர்களின் ரசிகர் பெருமக்கள் ஆர்மி ஆரம்பித்து விடுகின்றனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த மறுநாளே பலருக்கும் ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. குறிப்பாக சாண்டி, கவின், லாஸ்லியா, சாக்ஷி, மதுமிதா ஆகியோருக்கு ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. வனிதாவுக்கும் ஆர்மி உள்ளது. முகென், தர்ஷன், சாக்ஷி என பலருக்கும் ஆர்மி உள்ளது.

கக்கூஸ்லியா ஆர்மி

கக்கூஸ்லியா ஆர்மி

கவின் லாஸ்லியா காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவின்லியா ஆர்மியும் உள்ளது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கக்கூஸ் கவின், கக்கூஸ்லியா ஆர்மியினரும் உள்ளனர்.

எதுவும் சொல்லக்கூடாது

எதுவும் சொல்லக்கூடாது

ஒவ்வொரு ஆர்மியினரும் அவர்களுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை உண்டு இல்லை என செய்து வருகின்றனர். தங்களின் தலைவர்களை யாரும் எதுவும் சொல்லக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக உள்ளனர்.

சமூக வலைதளங்களில்

சமூக வலைதளங்களில்

பிக்பாஸ் வீட்டில் அவரவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள் ஆர்மியினர். இதனால் சமூக வலைதளங்களில் ஆர்மியினருக்குள் அடிதடி நடக்காத குறையாக சண்டை நடக்கிறது.

தலைமை ஏற்கும் உணர்வு

தலைமை ஏற்கும் உணர்வு

இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல் ஹாசன் உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் உணர்வை அவர்கள் இழந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது என்று கூறுகிறார்.

 ஆர்மியைதான் கூறுகிறாரோ?

ஆர்மியைதான் கூறுகிறாரோ?

படை என கமல்ஹாசன் கூறுவது ஆர்மியைதான் என தெரிகிறது. காதல் காதல் என அலைவதும் பின்னால் பேசுவதும் முதுகில் குத்துவதுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியார்களில் பெரும்பாலானவர்களின் பணியாக உள்ளது.

ஆர்மி ஒரு கேடா?

ஆர்மி ஒரு கேடா?

எல்லோரும் வந்த வேலையை விட்டு அவரவர் மனதில் தோன்றியதை செய்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது இவர்களுக்கு ஆர்மி ஒரு கேடா என மறைமுகமாக கேட்கிறார் கமல்ஹாசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X