கையில சாக்லெட்.. கழுத்துல டை.. கண்ணுல கோபம்.. ஸ்வீட் எடு கொண்டாடு.. இருக்கு இன்னைக்கு நைட்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரவு கமல் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விட்டது. இதனால் கவின்- சாக்ஷி- லாஸ்லியா முக்கோண காதல் கதையை மையமாக வைத்து நிகழ்ச்சியை ஓட்டி வருகிறார் பிக்பாஸ்.

பிக்பாஸ் வீட்டில் கவின் லாஸ்லியாவுக்கு கொடுத்த சாக்லேட் தான் கொடுத்ததுதான் என தவறாக புரிந்துகொண்ட சாக்ஷி கவினுடனான காதலை முறித்துக்கொள்வதாக கூறினார். அதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் பல பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது.

ஒரே வீட்டில் இரு பெண்கள்

ஒரே வீட்டில் இரு பெண்கள்

கடைசியாக கவினின் காதல் லீலைகளும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஒரே வீட்டில் இரு பெண்களிடம் ஒரே நேரத்தில் தனது காதல் விளையாட்டை காட்டி வந்தார் கவின்.

பெரிய தப்பு கவின்

பெரிய தப்பு கவின்

இதனை லேட்டாக நேற்று புரிந்து கொண்ட லாஸ்லியா, நீ செய்தது பெரிய தப்பு, எங்களின் ஃபீலிங்ஸ் உடன் விளையாடியிருக்கிறாய். சாக்ஷியுடன் இவ்வளவு க்ளோஸாக இருந்ததை ஏன் என்னிடம் கூறவில்லை என்று எல்லா கேள்விகளையும் கேட்டுவிட்டு திரும்பிக்கூட பார்க்காமல் சென்று விட்டார்.

படு அசத்தலாக கமல்

படு அசத்தலாக கமல்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் கமல் பங்கேற்கும் புரமோ வெளியாகியுள்ளது. அதில் ப்ரவுன் பேன்ட், வெள்ளை ஷர்ட், ப்ரவுன் டை என மனுஷர் படு அசத்தலாக வந்துள்ளார்.

சாக்லேட்டுடன் கிரங்கடித்த கமல்

சாக்லேட்டுடன் கிரங்கடித்த கமல்

அதோடு மட்டுமா ஹவுஸ் மேட்ஸ் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதையும், தமிழில் சொன்னால் ஃபீலிங்ஸ் என நச்சென விளாசியிருக்கிறார். ஃபீலிங்ஸ் குறித்து பேசிய கமல், பேன்ட் பாக்கெட்டில் இருந்து டைரிமில்க் சாக்லெட்டை எடுத்து படு ஸ்டைலாக நினைத்தாலே இனிக்கும் என சூசகமாக கூறி என கண் அடித்து கிரங்கடித்துள்ளார்.

சாக்லேட் விவகாரம்

சாக்லேட் விவகாரம்

ப்ரமோவை வைத்து பார்க்கும் போது இன்று இரவு சாக்லேட் விவகாரத்தை கையிலெடுப்பார் என தெரிகிறது. எது எப்படியோ எல்லோரின் முகத்திரையையும் கிழிக்கும் வகையில் குறும்படம் போட்டால் சரி என்கின்றனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X