ஓடவும் முடியாது ஒளியவும் முடியாதுன்னு சாக்ஷிக்கு தெரியாதா? குறும்படம் போட்டு கிழிங்க கமல் சார்!

சென்னை: பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் பங்கேற்றுள்ள சாக்ஷி அரைகுறையாக ஒட்டு கேட்டுவிட்டு கொளுத்தி போட்ட சம்பவம் பிக்பாஸ் வீட்டில் தீயாய் எரியத் தொடங்கியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே வனிதா, சாக்ஷி, அபிராமி, ரேஷ்மா, ஷெரின் ஆகிய ஐந்து பேரும் ஒரு கேங்காக ஃபார்ம் செய்து கொண்டனர். பின்னர் வந்த மீராவை கூட கொடூரமாக ட்ரீட் செய்தனர்.

குறிப்பாக சாக்ஷியும் அபிராமியும் மீரா மிதுன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததை கொஞ்சமும் விரும்பவில்லை என்பதை அவர்கள் நடந்து கொண்ட விதத்திலேயுமே தெரிந்தது. மேலும் மீரா குறித்தும் தவறாக பேசினர் இருவரும்.

கொளுத்தி போட்டுள்ளார்

கொளுத்தி போட்டுள்ளார்

அப்படி நடந்து கொள்ளக்கூடாது என அப்போதே சேரன் மற்றும் மதுமிதா சாக்ஷிக்கு அட்வைஸ் செய்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அரைகுறையாக ஒட்டு கேட்டுவிட்டு இல்லாத, நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி கொளுத்தி போட்டுள்ளார் சாக்ஷி.

சிலருக்கு பிடிக்காது

சிலருக்கு பிடிக்காது

அதாவது லிவிங் ஏரியாவில் மீராவும் முகெனும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது மீரா, என்னிடம் யாராவது நெருக்கமாக ஃபிரென்ட்லியாக இருந்தால் இங்கு சிலருக்கு பிடிக்காது.

நான் குறுக்கிட மாட்டேன்

நான் குறுக்கிட மாட்டேன்

அதனால் நீ எல்லோரிடமும் பேசு. நீ மற்றவர்களுடன் பேசுவதில் நான் குறுக்கிட மாட்டேன் என்று முகெனிடம் கூறுகிறார் மீரா. அப்போது கையில் துணியுடன் அவர்களை கடந்து செல்கிறார் சாக்ஷி.

பொய் சொன்ன சாக்ஷி

பொய் சொன்ன சாக்ஷி

பின்னர் பெட்ரூமுக்குள் சென்ற சாக்ஷி, அபிராமி, வனிதா, மற்றும் ரேஷ்மா ஆகியோரிடம் நம்முடன் பேசக்கூடாது என முகெனுக்கு ஆர்டர் போடுகிறாள் மீரா என கொளுத்தி போடுகிறார். இதனை கேட்ட வனிதாவும் அபிராமியும் தகதிமிதா என ஆடாத குறையாக குதிக்கிறார்கள்.

கும்மியடித்த சாக்ஷி

கும்மியடித்த சாக்ஷி

வனிதா இதுதான் சமயம் என இதற்கு காரணம் மதுமிதாதான் என்று அவர் மீது பாய்கிறார். அபிராமி அடிச்சு மீராவின் மூஞ்சை ஒடைச்சுறுவேன் என்கிறார். மீரா சொல்லாத ஒன்றை பேசாத ஒன்றை பேசியதாக கூறி குடும்பத்திற்குள் கும்மியடித்து விட்டார் சாக்ஷி.

குறும்படம் வேண்டும்

குறும்படம் வேண்டும்

இதற்கு கண்டிப்பாக வார இறுதியில் கமல்ஹாசன் குறும்படம் போட்டே ஆக வேண்டும். அப்படி போட்டால் மட்டுமே மற்ற ஹவுஸ் மேட்ஸ்களுக்கு பொய் பேசுவதற்கு கொஞ்சமாவது பயம் வரும் என்கின்றனர் ரசிகர் பெருமக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X