பிரித்து மேய்ந்த கமல்ஹாசன்.. காரித்துப்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அப்போதும் அடங்காத மீரா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் மீது மீரா கூறிய பொய் குற்றச்சாட்டை குறும்படமாக்கி கிழித்து தொங்கவிட்டார் நடிகர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது இயக்குநர் சேரன் எதார்த்தமாக மீராவை தள்ளினார். இதனை வேண்டுமென்றே சேரன் தன் மீது தவறான நோக்கத்தில் கை வைத்தார் என்று கூறி அதிர்ச்சியை கிளப்பினார் மீறா.

இதனை சற்றும் எதிர்பாராத சேரன், தனது குழந்தைகள் மீது சத்தியம் செய்து, தவறான நோக்கத்தில் கை வைக்கவில்லை என கண்ணீர் விட்டு கதறினார். அந்தக் காட்சியை பார்த்த பார்வையாளர்களும் கண்ணீர் விட்டனர்.

மகள்களின் எதிர்காலம்

மகள்களின் எதிர்காலம்

தன் பெயர் கெட்டுப்போனால் தனது மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று கூறி கண்ணீர்விட்டார். இந்தி நிகழ்ச்சியை விட்டு நான் கிளம்புகிறேன் எனக்கு எதுவும் வேண்டாம் என்றார். ஹவுஸ்மேட்ஸ்கள் ஆதரவாக பேச கொஞ்சம் நிதானமானார்.

மீராவை வெளியேற்ற வேண்டும்

மீராவை வெளியேற்ற வேண்டும்

அடுத்த சில நிமிடங்களிலேயே மீரா குற்றச்சாட்டு கூறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை பார்த்த மக்கள் மீராவை கழுவி கழுவி ஊற்றினர். நிச்சயம் சேரனின் மதிப்பையும் மரியாதையும் காப்பாற்ற உண்மையை மக்களுக்கு உரக்க கூற குறும்படம் போட வேண்டும், மீராவை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

காத்திருந்த பார்வையாளர்கள்

காத்திருந்த பார்வையாளர்கள்

சனிக்கிழமையான நேற்று அகம் டிவி வழியே பிக்பாஸ் போட்டியாளர்களை கமல் சந்திக்கும் புரமோ வெளியானது. அதில் மீராவின் குற்றச்சாட்டு குறித்து குறும்படம் போடப்படும் என தெரிவித்தார். இதனால் எப்போது மணி 9.30 ஆகும் கமல் வருவார், குறும்படம் போடுவார் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தனர் மக்கள்.

கமல் கோரிக்கை

கமல் கோரிக்கை

டைமும் ஆனது, லைட்டாக ஆரம்பித்த கமல் செம ஸ்ட்ராங்காக கொண்டு சென்றார். மீராவின் டர்ன் வந்தது, முதலில் மீராவின் வாயாலேயே எல்லாத்தையும் கூற கேட்டார் கமல். அதுமட்டுமல்ல சேரன் என்ன செய்தார் என்பதை யாரையாவது வைத்து மீராவை நடித்து காட்டும்படி கூறினார் கமல்.

தனியாக செய்து காட்டிய மீரா

தனியாக செய்து காட்டிய மீரா

சாண்டியை அழைத்த மீரா இரண்டு கைகளால் சாண்டியை தூக்கி அந்தப் பக்கம் போட்டார். அதனை பார்க்கும் போது நமக்கே திகில் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குறும்படத்தை போட்டார் கமல், அதில் மீரா, சேரன் குறித்து கூறிய குற்றச்சாட்டுகள், பிக்பாஸ் வீட்டில் சரவணன் முன்பு சேரன் எப்படி நடந்து கொண்டார் என்பதை சாண்டியை வைத்து மீரா தனியாக செய்து காட்டியது உள்ளிட்டவை இடம் பெற்றன.

கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்

கொண்டாடிய ஹவுஸ்மேட்ஸ்

இதைத்தொடர்ந்து கவுன்டவுனை தொடங்கிய கமல், ஒரிஜினல் காட்சியை போட்டார். அவ்வளவுதான் மீராவை தவிர ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் அந்த வீடியோவை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்களும் மீராவை காரித்துப்பாத குறையாக விமர்சித்தனர்.

கடுப்பான ஹவுஸ்மேட்ஸ், மக்கள்

கடுப்பான ஹவுஸ்மேட்ஸ், மக்கள்

அப்போதும் அடங்காத மீரா, உண்மை ஒரு நாள் வெளியே வரும் என்றார். இதனைக் கேட்டு ஹவுஸ்மேட்ஸ், கமல்ஹாசன், கமலுடன் இருந்த பார்வையாளர்கள் என அனைவருமே கடுப்பாகினர். நிகழ்ச்சியை நேரலையாக பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்கள் பயங்கரமாக கத்தி மீராவுக்கு எதிராக கூச்சலிட்டனர். கடைசியாக மீராவுக்கு அட்வைஸ் செய்த கமல் அடிக்கடி பொய் குற்றச்சாட்டுக்களை கூறினார் உண்மையான குற்றச்சாட்டை யாரும் நம்ப மாட்டார்கள் என்றார்.

நிம்மதியான சேரன்

நிம்மதியான சேரன்

ஒரு வழியாக சேரன் மீது எந்த தவறும் இல்லை என்பதை உரக்க கூறி தனது கடமையை செவ்வனே செய்தார் கமல். குறும்படம் போட்டு உண்மை வெளியே வரும் வரை, மிகவும் இறுக்கமாக காணப்பட்டார் சேரன். தன் மீது எந்த தவறும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட பின்னர்தான் நிம்மதியடைந்தார் சேரன். சேரனுக்கு உண்மையிலேயே இருந்தது தன் மீதான குற்றச்சாட்டு குறித்த பயம் அல்ல தன் மகள்களின் எதிர்காலம் குறித்த பயமே. இனிமேதான் மனுஷருக்கு தூக்கமே வரும் போங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X