கமலும் ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கிறார்: ஆனால் பிக் பாஸ் தான் அவர்...

By Siva

Recommended Video

கமலும் ஐஸ்வர்யா மீது செம கடுப்பில் இருக்கிறார்- வீடியோ

சென்னை: ஐஸ்வர்யா மீது பார்வையாளர்கள் மட்டும் அல்ல கமல் ஹாஸனும் செம கடுப்பில் இருப்பது நேற்றைய நிகழ்ச்சியின்போது தெரிய வந்தது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு எதிராக மக்கள் போட்ட ஓட்டுகளை எல்லாம் அவருக்கு ஆதரவாக போட்டதாக மாற்றி அவரை காப்பாற்றிவிட்டனர்.

பிக் பாஸ் இப்படி பிராடுத்தனம் செய்வார் என்பது பார்வையாளர்கள் எதிர்பார்த்தது தான்.

கோபம்

கோபம்

ஐஸ்வர்யா சென்றாயனிடம் பொய் சொல்லி காரியம் சாதித்ததை பார்த்து கமல் அவரை கண்டித்தார். நியாயப்படி உங்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் பிக் பாஸ் அவர் கையை கட்டிப் போட்டதால் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பிளேட்டை மாற்றி அவர் காப்பாற்றப்படுவதாக தெரிவித்து பார்வையாளர்களின் கோபத்திற்கு ஆளானார்.

விளாசல்

விளாசல்

ஐஸ்வர்யாவை காப்பாற்றியது பிக் பாஸ் என்றாலும் அதை அறிவித்த கமலை பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் திட்டித் தீர்த்தனர். அந்த மனுஷன் பாவம் என்ன செய்ய முடியும். அவருக்கு கொடுக்கும் ஸ்க்ரிப்டில் இருப்பதை தான் வாசிக்க முடியும். ஆனால் ஆண்டவரே, ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இப்படி பிராடுத்தனம் செய்பவர்கள் எழுதிக் கொடுப்பதை கேள்வி கேட்காமல் வாசிப்பது அழகாக இல்லை.

சென்றாயன்

சென்றாயன்

சென்றாயன் வெளியே கிளம்பிய போது ஐஸ்வர்யா தான் பெரிய நல்லவர் மாதிரி சீன் போட எழுந்து நின்று அண்ணா ரொம்ப நல்ல மனுஷன் என்றார். இதை பார்த்த கமல் கடுப்பாகி அந்த பொறுப்பு உங்களுக்கு இல்லை, உட்காருங்க என்று தலையில் குட்டு வைக்காத குறையாக கூறி ஐஸ்வர்யாவுக்கு செம நோஸ்கட் கொடுத்தார். ஐஸ்வர்யா சீன் போட முயன்றபோது கமல் அவரை அசிங்கப்படுத்திவிட்டார்.

வெளியேறுக

வெளியேறுக

தற்போதாவது உங்களுக்கு பார்வையாளர்களின் மனநிலை புரிந்ததே கமல் சார். சென்றாயன் மீது அவ்வளவு நல்ல அபிப்ராயம் இருந்தால் அவருக்கு பதில் நீங்க போங்களேன்னு கமல் சொல்ல அதையே தான் நான் சொல்ல நினைத்தேன் என்று ஐஸ்வர்யா பொய் சொன்னார். ஐஸ்வர்யாவின் பொய்யை தெரிந்து கொண்ட கமல் நிஜமாகவா, அது நடக்குமா என்று கேட்க அந்த சண்டக்கோழி முகத்தில் ஈயாடவில்லை. சூப்பர் கமல் சார்.

கடுப்பு

கடுப்பு

பார்வையாளர்களை போன்றே உங்களுக்கும் ஐஸ்வர்யா செய்யும் செயல்கள் பிடிக்கவில்லை என்பது நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து தெரிகிறது . மனதில் பட்டதை தைரியமாக பேசும் நீங்கள் இப்படி யாரோ எழுதிக் கொடுத்ததை படித்து உங்களின் உண்மையான உணர்ச்சிகளை மறைப்பது சரியா கமல் சார்?. ஐஸ்வர்யாவுக்கு நாங்க ஓட்டு போட்டதாக ஒரு கிராப் காட்டினீர்களே, அது பொய் என்று அனைவருக்கும் தெரிகிறது. அதிமேதாவியான உங்களுக்கு தெரியாமலா இருக்கும். இப்படி அடங்கி ஒடுங்கி இருப்பவர் கமல் அல்லவே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X