வேண்டாம் கமல், விட்டுடுங்க: அப்புறம் உங்களையே அசிங்கப்படுத்திடுவாங்க
சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் கமல் சார் வேண்டாம் விட்டுடுங்க என்று தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல் ஐஸ்வர்யாவை கண்டித்தார், மீண்டும் நாமினேட் செய்ய கோரிக்கை விடுத்தார். இது பிடிக்காத பிக் பாஸ் கமல் கிளம்பிய பிறகு வேலையை காட்டிவிட்டார்.
இந்நிலையில் கமல் ஐஸ்வர்யா மீது இன்னும் கோபத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜனனி
இரண்டு அணிகளுக்கும் வழங்கப்பட்ட பழமொழி விருது குறித்து சம்பந்தப்படவர்களிடமே விளக்கம் கேட்டார் கமல். மொசப்பிடிக்கிற நாயை மூஞ்சிய பார்த்தால் தெரியும் என்றார்கள் என வருத்தமாக கூறினார் தாடி பாலாஜி. சந்துல சிந்து பாடுவதாக என்னை சொன்னார்கள். அதாவது யாராவது இரண்டு பேர் சண்டை போட்டால் இடையே சென்று ஒரு கருத்தை கூறிவிடுகிறேனாம். இதை நான் ஒப்புக் கொள்கிறேன். அவ்வப்போது செய்திருக்கிறேன் சார் என்று உண்மையை ஒப்புக் கொண்டார் ஜனனி.

ரித்விகா
ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால். பிக் பாஸும் விளையாடணும், ஃபைனல்ஸுக்கும் போகணும், ஆனால் இமேஜ் மட்டும் கெட்டுவிடக் கூடாது என்றார்கள் என்றார் ரித்விகா. இதை கேட்ட கமல் சனிக்கிழமை தான் இந்த மலர் மலர்கிறது என்கிறார்களே ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்டதற்கு ஒப்புக் கொள்கிறேன் என்றார். கமலை பார்த்தால் மட்டும் தான் ரித்விகாவுக்கு பேச்சே வருகிறது. வாரம் முழுக்க கண்டும் காணாமலும் நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஐஸ்வர்யா
தவளை தன் வாயால் கெடும் என்பது ஐஸ்வர்யாவுக்கு அளிக்கப்பட்ட பழமொழி விருது என்றார் காயத்ரி. தெரிந்து கொள்ளாமல் பேசுவதால் அப்படி சொல்கிறார்கள் அதை நான் ஏற்கிறேன் என்றார் ஐஸ்வர்யா. அதற்கு கமலோ, எங்களுக்கு நீங்க அர்த்தம் சொல்ல வேண்டாம். நாங்க தானே அர்த்தம் சொல்ல வேண்டும். நுணலே ஒப்புக் கொண்டது என்று கூறி நக்கலாக சிரித்தார்.

குறும்படங்கள்
கமல் ஏற்கனவே நீங்கள் ஐஸ்வர்யாவை கண்டித்த பிறகு குறும்படங்கள் போட்டு அவரை நல்லவர் போன்று காட்டியுள்ளார். நேற்று நீங்கள் பேசியதை பார்த்தால் ஐஸ்வர்யா மீதான கோபம் இன்னும் தீரவில்லை போன்று. நீங்கள் பாட்டுக்கு கண்டித்துவிட்டு போய்விடுவீர்கள். பின்னர் பிக் பாஸ் ஒரு குறும்படம் போட்டு ஐஸு மாதிரி நல்லவர் உண்டோ என்று சீன் போட்டு உங்களை அசிங்கப்படுத்திவிடுவார். இதெல்லாம் உங்களுக்கு தேவையா கமல் சார்?


Click it and Unblock the Notifications











