ஒரு பக்கம் காதல் வழுக்குது.. ஒரு பக்கம் பாசம் வழுக்குது.. இதுக்கா வந்தீங்க? சாட்டையை சுழற்றும் கமல்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Elimination : இந்த வாரம் யாரும் வெளியேறமாட்டார்களா?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் போட்டியாளர்கள் எதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை நினைவு படுத்த வேண்டிய வாரம் இது என பொறுப்புடன் பேசியுள்ளார் கமல்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார். அப்போது வாரம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவர் விவாதிப்பார்.

அந்த வகையில் சனிக்கிழமையான இன்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல். அதற்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

இழந்துவிட்டனர்

இழந்துவிட்டனர்

இதில் நடிகர் கமல்ஹாசன், உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்படை இருக்கிறது. ஆனால் அந்த படைக்கு தலைமை ஏற்கும் உணர்வை அவர்கள் இழந்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது.

 பாசம் வலுக்குது

பாசம் வலுக்குது

ஒரு பக்கம் காதல் வலுக்குது, இன்னொரு பக்கம் பாசம் வலுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுப்படுத்த வேண்டிய வாரம் இந்த வாரம், என்று கூறுகிறார் கமல்.

அப்பா பாசம்

அப்பா பாசம்

கமலின் பேச்சை பார்த்தால் இந்த வாரம் லாஸ்லியா - கவின் காதல் குறித்து விசாரித்து சாட்டையை சுழற்றுவார் என தெரிகிறது. அதேபோல் தந்தை மகள் உறவில் சிக்கி லாஸ்லியாவால் காயமடைந்த இயக்குநர் சேரனையும் தெளிவுப்படுத்திவிடுவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.

அப்படி சொல்லுங்க

இதனிடையே கமலின் இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள், சொல்றதுதான் சொல்றீங்க கொஞ்சம் புத்தில உறைக்கிற மாதிரி சொல்லுங்க, காதல் வலுக்குது, பாசம் வலுக்குதுன்னு, நீங்கல்லாம் கேம் விளையாட வந்திருக்கீங்கன்னு செருப்பால அடிச்ச மாதிரி சொல்லுங்க என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தப்பு விஜய் டிவி மேல

கமல் சார். முதல டாஸ்க் ஒழுங்கா கொடுக்க சொல்லுங்க! சும்மா வெட்டியாவே ஒக்கார வெச்சா இப்படி தான் இருப்பாங்க! தப்பு விஜய் டிவி மேல டாஸ்க் மொக்கையா இருந்தா ஜாலியா தான் இருப்பாங்க! எப்படி டாஸ்க் கொடுக்கணும்னு தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் தெலுங்கு பார்க்கவும்! என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X