For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Bigg Boss 3 Tamil: யார் வோட் போடுவாங்கன்னே தெரியலையேப்பா!

|

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட் நிகழ்ச்சி என்பது எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இதுவரை குறும்படம் போடாமல் இருந்த பிக் பாஸ் நேற்று குறும் படமும் போட அனுமதி கொடுத்துட்டார்.

சனி, ஞாயிறு என்றாலே பிக் பாஸ் நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்துவிடும். காரணம் அந்த இரண்டு நாட்களிலும் உலக நாயகன் கமல்ஹாசன் வருகைதான். மனுஷர் மீசையை முறுக்கவதும், கவின் நான்கு பெண்கள் என்று துவங்கி, அடுத்து மூன்றில் வந்து இப்போது இரண்டில் நிற்பதை சாக்லேட்டின் சதுர வடிவத்தை குறிப்பிட்டு பேசுவதும் ரசிக்கும்படி இருந்தது.

இன்னும் இன்னும் என்று இவரை ரசிக்கும்படி பிக் பாஸ் சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது. ஆனால், எல்லாருமே காமிரா கான்ஷியஸாக இருக்கிறார்கள்.

மதிப்பு மீராவுக்கு

மதிப்பு மீராவுக்கு

நாம் வெளியில் எப்படி போட்றே ஆகிறோம் என்கிற புலம்பலில் இருந்த மீராவுக்கு மீட்டிங் அரேஞ் செய்தது சாக்ஷிதான் என்று மீரா எவ்வளவோ சொல்லியும் யாரும் நம்பவில்லை. போடு ஒரு குறும்பத்தை என்று நம்மவர் போட்டு காண்பிக்க மீராவின் மதிப்பு உயர்ந்துதான் போனது. மக்கள் மத்தியில் இனி மீராவுக்கு என்று ஒரு இடம் ரொம்ப ஸ்ட்ராங்காயிருச்சு. இதில் அபிராமி, ஷெரின் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியா இருக்காங்க.

வந்த முதல் நாளே

வந்த முதல் நாளே

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த முதல் நாளே,அபிராமி சாக்ஷியிடம், கவின் மேல எனக்கு ஒரு கிரஷ் இருக்கு. அதை சொன்னால், அவன் மச்சி மச்சின்னு பேசி பேச்சை மாத்திடறான். அவன் வேலைக்கு ஆக மாட்டான்னு சொல்லுச்சு. அதை கேட்டுக்கொண்டு இருந்த சாக்ஷி எப்படி கவின் வலையில் விழுந்தார் என்றுதான் தெரியவில்லை. அது சரி, அடுத்தவர் காதலை தட்டிப் பறிப்பதுதான் இன்றைய காதல் போலும்.!

மவுன விரதம் ஓவர்

மவுன விரதம் ஓவர்

மதுமிதா மவுன விரதம் இருப்பதெல்லாம் ஓவர். மவுன விரதம் இருக்கவா பிக் பாஸ் அக்ரிமெண்ட் சைன் பண்ணி அனுப்பி வச்சார்.இதுக்கு ஒரு கட்டுப்பாடு விதித்திருக்க வேண்டாமா? செய்யும் தொழில்தாங்க தெய்வம். இதை என்றைக்கு உணர்கிறீர்களா ,அன்றைக்கு கிடைக்கும் உங்களுக்கு வெற்றி. இதே ஒரு பெரிய டைரக்டர் படைத்துல ஷாட் இருக்கும்போது இப்படி செய்வீர்களா? மக்கள் இளிச்ச வாயர்கள்...

நைனா இது கூடவா

நைனா இது கூடவா

பிக்பாஸ் வீட்டில் நான் நல்லாத்தான் எல்லாரோடயும் பழகினேன். ஆனால், இவர்களில் யார் எனக்கு வோட் போட்டங்கள்ன்னு தெரியலைன்னு இது கூடவா நைனா தெரியாம இருக்கேன்னு கெடுக்கும் அளவுக்கு சொல்லி பேசிக்கிட்டே போனார் வெளியில் அனுப்பப்பட்ட மோகன் வைத்யா. ஒரு நிமிஷம் குறுக்கிடேறேன்னு நினைக்காதீங்க. வோட் போட்டது வீட்டுக்கு உள்ளே இருக்கறவங்க இல்லை. அவங்க நாமினேட் மட்டும்தான் செய்தாங்க. வோட் போட்டது மக்கள்தான் என்று தனது பணியை கவனம் பிசகி விடாமல் செய்த கமலுக்கு சல்யூட்!

English summary
Vijay TV's Bigg Boss show is a super hit show. Bigg Boss, who had not yet made a short film, was allowed to make a short film yesterday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more