வச்சாங்கள்ல ஆப்பு.. கவின்லியாவுக்கு குறும்படம்.. முகத்திரையை கிழித்த கமல்! பாபரக்கும் பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 62 : Kavin-னுக்காக Special குறும் படம்- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் கமல் குறும்படம் போடுவது புரமோவில் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லாஸ்லியாவும் காதலில் மூழ்கியுள்ளனர். அவர்கள் நேரம் காலம் தெரியாமல் ராத்திரி பகல் என நீண்ட நேரம் தனிமையில் பேசி வருகின்றனர்.

அவர்கள் கொஞ்சி குலாவும் காட்சிகளே அதிகம் காட்டப்படுவதால் பிக்பாஸ் பார்க்கவே போரடிக்க ஆரம்பித்துவிட்டது. ஒன்று கவின் - லாஸ்லியா காதல் இல்லையெனில் வனிதாவால் சண்டை. இவற்றை வைத்தே பிக்பாஸை ஓட்டி வருகின்றனர்.

சாட்டை சுழற்றிய கமல்

சாட்டை சுழற்றிய கமல்

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில் ஒரு பக்கம் காதல் வழுக்குது, இன்னோரு பக்கம் பாசம் வழுக்குது. வெற்றியை நோக்கி அவர்கள் நகர வேண்டும் என்பதை அவர்களுக்கே நினைவுப்படுத்த வேண்டிய வாரம் இந்த வாரம் என சாட்டையை சுழற்றினார் கமல்.

இரண்டாவது புரமோ

இரண்டாவது புரமோ

வெறும் பேச்சு மட்டும்தான் கமல் சார் உங்களுக்கு வழக்கம்போல கவினையும் சாண்டியையும் புகழ்ந்துதான் பேசுவீர்கள் என்றனர் நெட்டிசன்கள். இந்நிலையில் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

காரணம் தெரியுமா?

காரணம் தெரியுமா?

அதில் லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்கள் குறைந்ததற்கான காரணம் தெரியுமா? என்று கேட்கும் கமல், இது ஒரு விதிமீறல், விதிமீறல் செய்து விளையாட்டில் வெற்றி பெற முடியாது என்பதை விளக்கவே இந்தப் படம் என ஒரு குறும்படத்தை ஒளிபரப்புகிறார்.

மைக்கை மியூட் செய்துவிட்டு

மைக்கை மியூட் செய்துவிட்டு

அதில் கும்மிருட்டில் கவினும் லாஸ்லியாவும் நள்ளிரவில் சோபாவில் அமர்ந்து தனிமையில் பேசுகின்றனர். ஆனால் அவர்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை. காரணம் அவர்கள் இருவரும் மைக்கை மியூட் செய்தும் மூடிவிட்டும் மற்றவர்களுக்கு கேட்காதபடி பேசுகின்றனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

பிக்பாஸ் வீட்டில் மைக்கை மூடி விட்டோ மைக்கை கழட்டி வைத்து விட்டோ பேசக்கூடாது என்பது முக்கியமான விதி. ஆனால் அந்த விதியை மீறியுள்ளனர் இந்த காதல் ஜோடிகள். இதுவே லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் மதிப்பெண் குறைந்ததற்கான காரணம்.

தொங்கிப்போன லாஸ்லியா முகம்

இந்த குறும்படத்தை பார்த்ததும் லாஸ்லியாவின் முகத்தில் ஈயாடவில்லை. கவின் எப்போதும் போல சிரித்து மழுப்புகிறார். ஷெரின் ஓ மை காட் என ஆச்சரியத்துடன் சொல்கிறார். வனிதா விழித்து ஓ வென பார்க்கிறார். இந்த புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம் கமல் சார் என்று டிவிட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X