இன்னும் ஒரு நாள் தான் இருக்கு... கவுண்டவுன் ப்ரோமோ வெளியிட்ட கமல்ஹாசன்
சென்னை : பிக் பாஸ் 5 தமிழ் நிகழ்ச்சியின் துவக்க விழா வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் துவங்கவுள்ளது.
இதற்கான போட்டியாளர்களை அறிவித்துள்ளது விஜய் டிவி.
மேலும் கவுண்ட்வுன் ப்ரோமோ வீடியோவையும் கமல்ஹாசனை வைத்து வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5
விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. 4 சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கவுள்ளது. இதற்கான பிரமோஷன்களை அதிகளவில் விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. மேலும் போட்டியாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாளை பிரம்மாண்ட துவக்கம்
ஆயினும் ஞாயிற்றுக்கிழமையே போட்டியாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் கவுண்டவுன் ப்ரோமோக்களையும் விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. நேற்றைய தினமும் கமல் பிக் பாஸ் துவங்க இரண்டு தினங்கள் உள்ளதாக ப்ரோமோ வீடியோவில் பேசினார்.

கமல் கவுண்டவுன் வீடியோ வெளியீடு
நாம் பேசத் துவங்கி பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பேசி பழகி இருக்கிறோமா என்று அந்த வீடியோவில் கமல் பேசியிருந்தார். இன்னும் இரு தினங்களில் பிக் பாஸ் துவங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் மேலும் ஒரு கவுண்டவுன் வீடியோவில் கமல் பேசியுள்ளார்.

ரசிகர்கள் மனதை ஜெயிக்க வேண்டும்
இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர்கள் மாறினாலும் போட்டி ரசிகர்களின் மனதை ஜெயிப்பது மட்டுமே என்று பேசியுள்ளார் கமல். மேலும் போட்டி துவங்க இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கிறார். கடந்த சில தினங்களாகவே பிக் பாஸ் ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில் கமலும் தன் பங்கிற்கு எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











