Bigg boss 3 tamil: பிக் பாஸ் சேரன் - உலக நாயகன் கமல்.. ஃபிளாஷ் பேக்!

சென்னை: விஜய் டிவியின் மிகப் பிரபலமான, பிரமாண்டமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது இப்போது 3 வது சீசன் துவங்கி உள்ளது. உலக நாயகன் கமல் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் வீடு அவர்களுக்கு எல்லா நாட்களும் அன்பு, விரோதம், சண்டை சச்சரவு என்று களைக் கட்டினாலும், ரசிகர்களுக்கு என்னவோ கமல் தங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரும் அந்த சனி ஞாயிற்று கிழமைகள்தான் களை கட்டும்.

என்னதான் சொல்லுங்க கமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் விதமே அலாதி பிரியத்தை நமக்குத் தருகிறது. மக்களின் சொந்த விருப்பு, வெறுப்பு எதையும் டச் பண்ணாம பொதுவா மக்களுக்குன்னு அவர் சொல்ற கருத்துக்கள் கேட்க விருப்பமாத்தான் இருக்கு.

மகாநதி சேரன்

மகாநதி சேரன்

மகாநதி படத்தில் நடிகர் கமல் ஹாசன் நடித்து கொண்டு இருந்த போது, சேரன் அந்த படத்தில் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். அப்போது சீன் கன்டினியூட்டி பார்ப்பது சேரனின் வேலை. கமலுக்கு அன்று கன்டினியூட்டி சீன். ஒரு உடையைக் கொண்டு வந்து கொடுத்த சேரன், இதுதான் சார் உங்க கன்டினியூட்டி காஸ்ட்யூம்னு சொல்லி இருக்கார். இதுவா, இது இல்லையே நான் வேற டிரஸ் போட்டு இருந்த மாதிரி நினைவு இருக்குன்னு நம்மவர் சொல்லி இருக்கார்.

வேலையை விட்டு போயிடறேன்

வேலையை விட்டு போயிடறேன்

இல்லை சார் இதுதான்னு சேரன் சொல்ல, இல்லை எனக்கு நல்லா ஞாபகமிருக்கு...வேறதான் போட்டு இருந்தேன்னு சொல்றார் கமல். மறுபடியும் இதுதான் சார்னு சேரன் சொல்ல, இது இல்லேன்னு நான் நிரூபிச்சா நீங்க என்ன செய்வீங்கன்னு கேட்டு இருக்கார் கமல். கன்டினியூட்டி உடை இது இல்லேன்னா நான் வேலையை விட்டே போயிடுறேன் சார்னு சேரன் சொல்றார்.

கனிட்டினியூட்டி ஷாட்ஸ்

கனிட்டினியூட்டி ஷாட்ஸ்

கமல்ஹாசன் அப்போதுதான் லேட்டஸ்ட்டா வந்த புதுவித கேமிராவை வாங்கி வச்சு இருந்திருக்கார். அதுவும் கன்டினியூட்டி மிஸ் ஆகாம இருக்க உடனுக்குடன் செக் பண்ண வாங்கியதுதானாம். அன்று ஷூட் செய்த காட்சிகளை அன்றே பிரின்ட் போட்டு வாங்கி வச்சுக்க சொல்லிடுவாராம். உடனே உதவியாளரை கூப்பிட்டு, அந்த ஸ்டில்ஸை எடுத்துட்டு வாங்கன்னு சொன்னாராம்.

சொன்னதே உண்மை

சொன்னதே உண்மை

ஸ்டில்ஸை பார்த்தால் கமல் சொன்னதுதான் உண்மை. அவர் சொல்லியபடி வேற காஸ்ட்யூம்தான் கமல் போட்டு இருந்திருக்கார். பார்த்தியான்னு கேட்டு இருக்கார் கமல். உடனே அப்படியே வேலையை விட்டு கிளம்பிட்டாராம் சேரன். அதன் பிறகு அவ்வை ஷண்முகி படம் கமல் நடிக்கும் போது ரவிக்குமாரை சந்திக்க வந்த சேரன் அப்போது ஹிட் படமான பாரதி கண்ணம்மா குடுத்த சமயம். அதற்கு முன்பு கே.எஸ் ரவிக்குமாரிடம் அசிஸ்டென்ட்டா இருந்திருக்கார்.

செட்டுக்கு வந்த சேரன்

செட்டுக்கு வந்த சேரன்

அந்த உறவில் அவ்வை ஷண்முகி செட்டுக்கு வந்த சேரன், கமலைப் பார்ப்பதையே தவிர்த்து அங்கு இங்கு என்று உட்கார்ந்து இருந்திருக்கார் . பிறகு கமல் அந்த பையனை வர சொல்லுன்னு சொல்லி, சேரன் வந்தவுடன் வணக்கம் சொல்லி இருக்கார். எப்படி இருக்கே... படம் பார்த்தேன் நல்லா இருந்ததுன்னு சொல்லி பாராட்டி அனுப்பினாராம். அந்த படம் பார்த்துடீங்களா சார்னு உதவியாளர் கேட்க, இல்லை... சும்மா பாராட்டலாம்னு சொன்னேன்.. நல்ல படம்தானன்னு கமல் சொல்லி இருக்கார்.

எப்படி இருக்கு இந்த ஃபிளாஷ்பேக் ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X