TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
கமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி
சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் போலியாக இருப்பது குறித்து விசாரணை நடத்தினார் கமல் ஹாஸன்.
பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவர்களாக இல்லாமல் கேமராவுக்கு முன்பு போலியாக இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதையே பார்வையாளர்கள் கமலிடம் தெரிவித்தனர்.
கமல் சற்றும் காலம் தாழ்த்தாமல் போட்டியாளர்களிடமே கேட்டார்.
ஷாரிக்
சென்றாயன் தான் தானாக இருப்பதாக கூறினார். ஷாரிக்கும் அதையே தான் கூறினார். ஆனால் அவர் போலியாக இருப்பதாக கமல் தெரிவித்தார். கிடைத்த வாய்ப்பை ஷாரிக் பயன்படுத்தவில்லை என்றார் கமல்.
போலி
வைஷ்ணவி தான் உண்மையாக இருப்பதாக கமலிடம் தெரிவித்தார். கமல் பார்வையாளர்களை பார்த்து நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்க அவர்களோ அவர் போலியாக நடிக்கிறார் என்று கூறிவிட்டார்கள்.
புறணி
நீங்கள் கேமராக்களுக்கு முன்பு நடிப்பதாகவும், நீங்கள் புறணி பேசுவது தான் உண்மையான முகம் என்றும் பார்வையாளர்கள் நினைக்கிறார்கள் என்று கமல் ஹாஸன் உண்மையை உரக்கச் சொன்னார்.
மமதி
வைஷ்ணவி போலியாக இருப்பதாக மகத் தெரிவித்தார். வைஷ்ணவியோ மமதி போலியாக இருப்பதாக கூறினார். எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகமாக, நல்லவராக இருக்கிறார், அப்படி யாராலும் இருக்க முடியாது, மமதி நடிக்கிறார் என்று வைஷ்ணவி கூற பார்வையாளர்கள் கை தட்டி, விசில் அடித்தனர்.
கெட்டவர்
மும்தாஜ், மமதி நடிப்பதாக கூறிய வைஷ்ணவிக்கு அதிர்ச்சி கொடுத்தார் மகத். அதாவது வைஷ்ணவி எங்களிடம் வந்து மும்தாஜ், மமதியை பற்றி தப்புத் தப்பாக பேசிவிட்டு அவர்களிடம் போய் நல்லவர் போன்று பேசுகிறார் என்று கமலிடம் போட்டுக் கொடுத்தார் மகத்.
நித்யா
பிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனை போன்று அல்லாமல் இந்த சீசனில் அனைவருமே நடிக்கிறார்கள் என்று நித்யா கமலிடம் கூறினார். வைஷ்ணவி, ஜனனி, மமதி, மும்தாஜ், ஷாரிக், நித்யா, ரித்விகா, பாலாஜி ஆகியோர் நடிப்பதாக பொன்னம்பலம் தெரிவித்தார்.