டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின்.. இல்ல அதையும் தாண்டி.. வறுத்தெடுக்கும் கமல்!

சென்னை: இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கவினை வச்சு செய்வது தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் அதிக பாயின்ட்ஸ்களை பெறும் போட்டியாளர்கள் நேரடியாக ஃபைனல்ஸ்க்கு தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனால் போட்டியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு விளையாடினார்கள். இந்த போட்டிகளின் போது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு இடையே பிரச்சனையும் அரங்கேறியது.

டாஸ்க்கின் போது

டாஸ்க்கின் போது

இந்நிலையில் கமல் பங்குபெறும் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்க்கின் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்து விவாதிக்கிறார் கமல்.

வில்லங்கமாக இழுத்த கமல்

வில்லங்கமாக இழுத்த கமல்

கவினிடம் ஆரம்பிக்கும் கமல், டாஸ்க்க டாஸ்க்கா பாத்தீங்களா கவின், இல்லை அதையும் தாண்டி என வில்லங்கமாக இழுக்கிறார் கமல். அதற்கு பதிலளிக்கும் கவின், முதலில் முகெனும் லாஸ்லியாவும் இடித்துக்கொண்டார்கள். பிறகு சாண்டியும் இடித்து விழுந்தபோது நம்மை தாண்டி ஒரு எமோஷன் வரும் இல்லையா என்று கூறினார்.

ஒரே போடாக போட்ட கமல்

ஒரே போடாக போட்ட கமல்

உடனே கமல், தர்ஷன் கையில் அடிபட்ட போது அந்த எமோஷன் வரவில்லையே என்று ஒரே போடாக போட்டார். இதனால் என்ன சொல்வதென்று தெரியாமல் சிரித்து மழுப்புகிறார் கவின். லாஸ்லியா ஒன்றுமே தெரியாதது போல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.

சாண்டி மீது பாய்ந்த கவின்

சாண்டி மீது பாய்ந்த கவின்

பால் டாஸ்க்கின் போது சாண்டி லாஸ்லியா மீது மோதினார். அப்போது லாஸ்லியா கீழே விழுந்துவிட்டார். இதனால் பொங்கிய கவின், சாண்டி வேண்டுமென்றே மோதி கீழே தள்ளியதாக அவர் மீது பாய்ந்தார்.

சண்டைபோடும் லாஸ்,கவின்

சண்டைபோடும் லாஸ்,கவின்

இதனை தொடர்ந்து ஒவ்வொரு டாஸ்க்கின் போதும் கவினும் லாஸ்லியாவும் சாண்டியை டார்கெட் செய்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் சாண்டி மன உளைச்சலில் உள்ளார். இதனை மனதில் வைத்தே கமல் கவினை ரோஸ்ட் செய்கிறார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X