இது ஃபிரன்ட்ஷிப்பா? யார் குறித்து 'கதை'க்கிறார் கமல்ஹாசன் புரிகிறதா?!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 :Day:48 : இருவரின் Friendship பற்றி இன்று விவாதிக்கும் கமல்- வீடியோ

சென்னை: பிக்பாஸில் உள்ள முக்கியமான இருவரின் ஃபிரன்ட்ஷிப்பை பற்றி இன்று விவாதிக்க போகிறார் கமல்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திப்பது வழக்கம்.

அப்போது வாரம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் விவாதிப்பார். அதன்படி சனிக்கிழமையான இன்று ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் கமல்.

மூன்று வகை ஃபிரன்ட்ஷிப்

மூன்று வகை ஃபிரன்ட்ஷிப்

இதற்கான புரமோ தற்போது வெளியாகியுள்ளது. கோட் சூட்டில் டக்கராக வந்துள்ள கமல், ஃபிரன்ட்ஷிப் குறித்து பேசுகிறார். அதாவது ஃபிரன்ட்ஷிப்ல மூன்று வகை உள்ளது, ஒன்று ஃபிரன்ட்ஸ், மற்றொன்று க்ளோஸ் ஃபிரன்ட்ஸ் மூன்றாவது நம்மளையே க்ளோஸ் பண்ற ஃபிரன்ட்ஸ்.

இது ஃபிரன்ட்ஷிப்பா?

இது ஃபிரன்ட்ஷிப்பா?

இந்த மூன்றுமே பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது. ஆனால் எனக்கு ஒரு கேள்வி இருக்கு இது ஃபிரன்ட்ஷிப்பா? இதே கேள்விதான் உங்களுக்கும் இருக்கும் என நினைக்கிறேன், இன்று கேட்டு விடலாம் என்கிறார்.

அபிராமி - முகென்

அபிராமி - முகென்

கமல் லாஸ்லியா - கவின் இடையேயான ஃபிரன்ட்ஷிப்பை தான் பேசுகிறார் எனத் தெரிகிறது. ஏனெனில் முகெனுடன் நெருக்கமாக உள்ள அபிராமி, அவரை காதலிப்பதாக பல முறை புரபோஸ் செய்துவிட்டார். முகெனை காதலிப்பதாக கமலிடமே வெளிப்படையாக கூறிவிட்டார் அபிராமி.

கதைக்காமல் இருக்க முடியாது

கதைக்காமல் இருக்க முடியாது

ஆனால் லாஸ்லியாதான் கவினுக்கும் தனக்கும் இருப்பது ஃபிரன்ட்ஷிப் என கூறி மழுப்பி வருகிறார். அவ்வப்போது கவினை சைட் அடிக்கிறேன் என்று சொல்லும் லாஸ்லியா கவினை பிடிக்கும், அவருடன் கதைக்க பிடிக்கும், கவினுடன் கதைக்காமல் இருக்க முடியாது என கூறிவருகிறார்.

இன்று பேசப்போகிறார்

இன்று பேசப்போகிறார்

கவினும் லாஸ்லியாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் விதம், பேசிக்கொள்ளும் விதம் நட்பாக தெரியவில்லை. இது என்றோ பார்வையாளர்களுக்கு தெரிந்துவிட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று இதுகுறித்துதான் பேசப்போகிறார் என தெரிகிறது.

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

எதிர்பாராததை எதிர்பாருங்கள்

சொல்ல முடியாது.. வேறு யாரைப் பற்றியாவது பேசி எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறிவிடுவார் கமல். யாரை பற்றிப் பேசப்போகிறார் என்பதை இன்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X