அ.. ஆ... அது.. ஸ்டேஜில் வைத்து கவினை மரண பங்கம் செய்த கமல்.. வேற லெவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினும் லாஸ்லியாவும் தீவிரமாக காதலித்தனர். இங்கேயே தாலி கட்டி கூட்டிப்போனால் யார் என்ன செய்ய முடியும் என சேரனை, அட்டாக் செய்து பேசினார்.
கவின் லாஸ்லியா காதலுக்கு லாஸ்லியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதும், லாஸ்லியா கவினுடனான காதலை கைவிடவில்லை. இந்நிலையில் கவின் கடந்த வியாழக்கிழமை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கமல் பதில்
இந்நிலையில் இதுகுறித்து கவினிடம் கமல் விசாரிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் கவின் ஏன் இப்படி செய்தார் என்பதற்கு கவின்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார் கமல்.

அகம் டிவி வழியாக கவின்
அதன்படி இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரமோவில், கமலுடன் ஸ்டேஜில் கவினும் உள்ளார். அப்போது, அகம் டிவி வழியாக அகத்திற்குள் சென்று பேசும் கவின், லாஸ்லியாவிடம் பேசுகிறார்.

குறுக்கிட்ட கமல்
சாரி.. எமோஷனலி நீங்க எவ்ளோ பிரேக் ஆவிங்கன்னு எனக்கு தெரியும், தெரிஞ்சும் நான் ஏன் அப்படி பண்ணேன்னா.. என்று கூறுகிறார் கவின். அப்போது குறுக்கிடும் கமல், நீங்க அப்படிங்றீங்க, வாடாங்றீங்க, நீ- ங்றீங்க.. எப்படி இது மரியாதை என கேட்கிறார்.

கமல் ரியாக்ஷன்
அதற்கு, இல்ல.. அவங்க வீட்லயும் பார்த்துட்டு இருப்பாங்கள்ல என்று அப்பாவித்தனமாக கூறுகிறார் கவின். இதனைக்கேட்டு ஆ.. அது என கமல் கொடுத்த ரியாக்ஷன்.. அப்பப்பா.. வேற லெவல்.

கொண்டாடிய ஆடியன்ஸ்
கமலின் இந்த ரியாக்ஷனை பார்த்த ஆடியன்ஸ் பயங்கரமாக கத்தியும் கைகளை தட்டியும் ஆரவாரம் செய்தனர். 90 நாட்கள் வீட்டுக்குள் செய்த விஷயங்கள் எல்லாம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்ட நிலையில் கவின் இப்போது அதனை யோசித்து பேசுவது, உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











