ஜெயலலிதா பாணியில் பிக் பாஸ் வீட்டில் குட்டி கதை சொன்ன கமல்: யார் கதை தெரியுமா?
Recommended Video

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் ஹாஸன் குட்டி கதை கூறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் வருவார் என்பது தெரிந்த விஷயமே. இந்த சீசனில் கமல் வந்தால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியே சூடுபிடிக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடப்பவையை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகத் தான் செய்கிறார்கள்.

அரசியல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அரசியல் பேசாமலா?. முதல் நாளே சிறையை பார்த்துவிட்டு என்ன ஒரு வசதியும் இல்லை என்று சசிகலாவை கலாய்த்தார் கமல். இந்நிலையில் ஜெயலலிதா பாணியில் குட்டி கதை சொல்லியுள்ளார்.

வைஷ்ணவி
ஆர்.ஜே. வைஷ்ணவி தனது முகத்தின் ஒரு பக்கம் கருப்பாக இருப்பதால் தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அதனால் மேக்கப் இல்லாமல் வெளியே செல்வது இல்லை என்றும் கூறி அழுதார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு நான் நானாக இருக்கிறேன், மேக்கப் இல்லாமல் வருகிறேன். தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கமலிடம் தெரிவித்தார் வைஷ்ணவி.

கதை
நான் பாலிவுட் பக்கம் சென்றபோது அங்கு இருந்த ஹீரோக்கள் அனைவரும் உயரமாக இருந்தனர். என்னை ஹீல்ஸ் அணியச் சொன்னார்கள். திறமை தான் முக்கியமே தவிர உயரம் இல்லை என்று எனக்கு தோன்றியது. அந்த தாக்கம் தான் அபூர்வ சகோதரர்கள் படத்தில் வந்த அப்பு கதாபாத்திரம். குள்ளமான அப்புவின் திறமையை தான் மக்கள் பார்த்தார்களே தவிர உயரத்தை அல்ல என்று குட்டி கதை கூறினார் கமல்.

குட்டு
கமல் ஏதோ வாரத்தில் 5 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காமல் இருப்பது போன்று அவரிடமே பொய் சொல்லி ஏமாற்றப் பார்த்தார் நித்யா. கமலோ யார் தப்பு செய்தாலும் தப்பு தான், தண்டனை உண்டு அது என் கட்சியாக இருந்தாலும் சரி என்று கறாராக கூறி கைதட்டல்களை பெற்றார்.


Click it and Unblock the Notifications











