Bigg boss 3 tamil: நம்மவர் இன்னிக்கு கிராமத்தான் விருமாண்டியா மாறப்போறார்!

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களை தன் வசம் நன்றாக கட்டிப்போட்டு, இங்கு அங்கு நகர விடாமல் செய்கிறது. அதுவும், சனி ஞாயிறுகளில் வெளியில் சென்று இருப்பவர்கள் கூட அவசரமாக வீடு திரும்பி விடுகிறார்கள்.

அன்று நம்மவர், உலக நாயகன் கமல்ஹாசன் பஞ்சாயத்து பண்ண வந்துருவாரே .. அதைப் பார்க்காமல் இருக்க முடியுமா என்ன? அப்படித்தான் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பிப் பார்க்கிறார்கள்.

இன்று கமல் வருகைக்காக மக்கள் காத்திருக்கும் அதே வேளையில் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸும் தங்களது பிராதுகளைக் கமல்ஹாசன் வசம் கொடுக்க காத்து இருக்கின்றனர்.

 அரசியல் கமல்

அரசியல் கமல்

கிராமசபை என்பது இப்போது பெரும் அரசியலாகி உள்ளது. அந்தந்த ஊரில் மாதத்தில் ஒரு நாள் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டம் என்பது ஆர்டர். இப்படிப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டில் .நாட்டாமை டாஸ்க் கொடுத்து இருந்தார்கள்.இது அரசியலில் இருக்கும் கமலுக்கு அல்வா சாப்பிடற மாதிரியான ஒரு வாய்ப்பு இல்லையா.. இன்னிக்கு பாருங்க நிகழ்ச்சி தூள் பறக்கப் போகுது.

விருமாண்டி கமல்

விருமாண்டி கமல்

என்னதான் ப்ரோமோவில் கமல் கோட் சூட் போட்டுக்கொண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது போல காண்பித்தாலும், பேசும் பாஷை என்னவோ விருமாண்டி கமல் பாஷை போல இருக்குது.விருமாண்டியில் நக்கலாக கேட்பார், உனக்கு எல்லாம் தெரியும்னு சொன்னியே..இப்போ எனக்கு எங்கே அரிக்குதுன்னு சொல்லு பார்ப்போம்னு.

நக்கலாக பேசுகிறார்

நக்கலாக பேசுகிறார்

விருமாண்டி படத்தில் நிறைய நக்கல்கள் செய்தாலும், அதுவும் தட்டிக்கேட்பது போல முரட்டுத் தனமாகத்தான் இருக்கும். அதே பாணியில் இருக்கிறது இன்றைய பிக் பாஸ் கமலின் ப்ரோமோ.சும்மாவே மக்களுக்கு விழிப்புணர்வு தரேன்னு நிறைய கருத்து சொல்வார் கமல். இப்போது, பிக்பாஸ் ஹவுசில் நாட்டாமை டாஸ்க் வேற நடந்து முடிந்து இருக்கிறது.

கூட்டத்தை வச்சு

கூட்டத்தை வச்சு

கிராம சபை கூட்டத்தை வச்சு இப்போது சும்மா புகுந்து விளையாடிடமாட்டார் மனுஷன். எப்போதுடா மக்களுக்கு விழிப்புணர்வு கருத்து சொல்லலாம்னு காத்திருக்கும் நேரத்தில் பிக் பாஸ் ஹவுசில் நாட்டாமை டாஸ்க் முடிந்து, வயிற்றை பிடித்து தள்ளினார், இழுத்து விட்டார்னு பல்வேறு புகார்கள். சும்மா விடுவாரா நம்மவர்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X