பிக் பாஸை 'பீப் பாஸ்' ஆக்கிய பாலாஜி: குறும்படம் போட்டு குட்டு வைத்த கமல்

By Siva

சென்னை: நித்யாவை கெட்ட வார்த்தைகளால் திட்டிய பாலாஜிக்கு குட்டு வைத்தார் கமல் ஹாஸன்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நித்யா, பாலாஜி பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. அவர்கள் சண்டை போடுவதை பார்த்தால் எரிச்சலாக உள்ளது. நமக்கே இப்படி என்றால் அவர்களின் 7 வயது மகளின் நிலைமையை நினைத்துப் பார்த்தால் பாவமாக உள்ளது.

பாலாஜி நித்யாவை கெட்ட, கெட்ட வார்த்தைகளால் வேறு திட்டுகிறார்.

மைக்

மைக்

சேலை மாற்ற பெண்கள் படுக்கையறையுடன் சேர்ந்திருக்கும் பாத்ரூமை திறந்துவிடச் சொல்லி போராடிய மும்தாஜ் தனது மைக்கை கழற்றி வைத்தார். அவர் செய்த விதிமீறல் குறித்து கமல் கடிந்து கொண்டார்.

மும்தாஜ்

மும்தாஜ்

தான் செய்தது தவறு இல்லை என்றார் மும்தாஜ். நட்சத்திர அந்தஸ்து பார்த்து சொகுசாக இருக்கப் பார்க்கிறீர்களா என்று பொட்டில் அடித்தது போன்று கேட்டார் கமல். நீங்கள் ஆயிரம் சொன்னாலும் நீங்கள் செய்தது தவறு. கேமராக்கள் இல்லாத இடத்தில் நீங்கள் மயங்கி விழுந்துவிட்டால் அதை நாங்கள் அறிய ஒரே வழி மைக் தான். அப்படி இருக்கும்போது நீங்கள் மைக்கை கழற்றியது தவறு என்று ஆணித்தரமாக தெரிவித்தார் கமல்.

நட்சத்திரம்

நட்சத்திரம்

கேரட் பொரியலில் வெங்காயம் சேர்க்க மறுத்த நித்யா பற்றி போட்டி போட்டிக் கொண்டு என்னிடம் குறை கூறினீர்கள் ஆனால் மும்தாஜ் மைக்கை கழற்றி வைத்தது பற்றி ஏன் யாருமே பேசவில்லை என்று கேட்டு போட்டியாளர்களை அதிர வைத்தார் கமல். மும்தாஜ் பற்றி சொல்ல பயமாக இருக்கிறது என்று போட்டியாளர்கள் தெரிவித்தனர். நாங்கள் குறை கூறினால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை உங்களுக்கு இல்லை என்று பாலாஜி மும்தாஜிடம் கூறினார்.

தண்டனை

தண்டனை

நாங்கள் சொல்லும் வரை மைக்கை கழற்றிவைத்து நாங்கள் அழைக்கும் வரை ஓரமாக இருங்கள் என்று மும்தாஜுக்கு தண்டனை கொடுத்தார் கமல். பின்னர் அவரை கார்டன் பகுதியில் தனியாக அமர்ந்திருக்குமாறு கூறினார் பிக் பாஸ்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

பாலாஜி தன்னை கெட்ட வார்த்தையால் திட்டுவதாக நித்யா கமலிடம் கூறினார். பாலாஜி செய்வது தவறு என்பதை குறும்படம் போட்டு நிரூபித்தார் கமல். மேலும் போட்டியாளர்கள் நித்யாவை பற்றி பொய் சொன்னதையும் கமல் குறும்படம் போட்டுக் காட்டி உண்மையை நிரூபித்தார்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

இவ்வளவு பீப்புகள் நிறைந்த குறும்படம் இது தான். நான் பல ஆதங்கங்களை வெளிக்காட்டாமல் இருந்தேன் என்று பாலாஜி கூற நீங்கள் வெளிக்காட்டாமலேயே இவ்வளவு பீப் போட வேண்டியதாகிவிட்டது என்றார் கமல். பாலாஜி கெட்ட வார்த்தை பேசியது தவறு என்று கமல் அவரிடம் கறாராக தெரிவித்தார். மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொள்வது சரி இல்லை என்று எடுத்துக் கூறினார் கமல். புருஷன், பொண்டாட்டி பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்வதிலேயே கமலுக்கு நேரம் சென்றுவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X