பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டி.... பாலாஜியின் மகளுக்கு கமல் கொடுத்த பரிசு!
பாலாஜியின் மகளுக்கு நடிகர் கமல் ஸ்மார்ட் போன் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்
Recommended Video

சென்னை: நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் பாலாஜியின் மகளுக்கு அழகான பரிசு ஒன்றை கொடுத்துள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 30ஆம் தேதி நிறைவடைந்தது. ரித்விகா டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா இரண்டாம் இடம் பிடித்தார்.

தற்போது தாடி பாலாஜியின் மகள் போஷிகாவுக்கு ஒரு அழகிய ஸ்மார்ட் போனை நடிகர் கமல்ஹாசன் பரிசளித்துள்ளது தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு போட்டியாளர்களை அழைத்து மவுண்ட் ரோட்டில் உள்ள நட்சத்திர விடுதியில் பார்ட்டி கொடுத்தார் கமல்ஹாசன்.
அந்த நிகழ்வில், ரித்விகா, ஜனனி, டேனி, ஷாரிக், சென்ட்ராயன், மகத், மகத்தின் காதலி பிராச்சி, பொன்னம்பலம், பாலாஜி, நித்யா, விஜயலட்சுமி, வைஷ்ணவி மற்றும் என்.எஸ்.கே ரம்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கமல்ஹாசன் பாலாஜியின் மகள் போஷிகாவிற்கு ஒரு அழகிய ஸ்மார்ட் போனை பரிசளித்துள்ளார். இந்த விஷயத்தை பிக்பாஸ் போட்டியாளரான நித்யா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











