Don't Miss!
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
திடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்! காரணம் இதுதான்…!
விஸ்வரூபம் 2 புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இல்லாதவருக்கு ஒரு வீடு... இருக்கப்பட்டவருக்குப் பல வீடு என்பார்கள்... இது உலகநாயகனுக்கு சரியாக பொருந்தும் போல.
சினிமா, அரசியல், தொலைக்காட்சி என்று பல தளங்களில் பரபரப்பாக இயங்கிவருகிறார் கமல்ஹாசன். இவருடைய விஸ்வரூபம் 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஊர் ஊராக பறந்து பறந்து படத்திற்கான புரோமோஷன் வேலைகளை கவனித்து வருகிறார். தமிழ் விஸ்வரூபம் 2 புரோமோஷனை பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்தினார். இந்தி புரமோஷனை சல்மான்கான் தொகுத்து வழங்கும் தஸ் கா தம் நிகழ்ச்சியில் செய்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் கமல்ஹாசன். தெலுங்கில் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய நிலையில், இரண்டாவது சீசனை "நான் ஈ" புகழ் நானி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹசன்.
ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தோடு ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கியுள்ளர். பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.