அவரே புதுசாதான் வந்திருக்காரு.. உங்களுக்கு தெரியாதா? தர்ஷனை மறைமுகமாக சாடிய கமல்!

Recommended Video

Bigg Boss 3:Abhirami Eliminated | 18th August Episode

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் கேங்குடன் சேர்ந்துக்கொண்டு தர்ஷன் தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருவதை கமல்ஹாசன் மறைமுகமாக சாடினார்.

பிக்பாஸ் வீட்டில் வந்த நாள் முதல் செல்லப்பிள்ளையாக இருந்தவர் தர்ஷன். என்ன நடந்தாலும் முதலில் குரல் கொடுப்பவர் தர்ஷனாகத்தான் இருந்தார்.

எல்லோரும் அஞ்சி நடுங்கிய வனிதாவையே தில்லாக எதிர்த்து நின்று கேள்வி கேட்டவர் தர்ஷன். இதனால் மக்களிடம் அவருக்கு என நல்லப் பெயர் கிடைத்தது.

ஒரிஜினாலிட்டியை இழக்கும் தர்ஷன்
நியாயத்தை மறக்கும் தர்ஷன்

இந்நிலையில் கவின், சாண்டி, லாஸ்லியா மற்றும் முகெனுடன் சேர்ந்து கொண்டு தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார். மதுமிதா விஷயத்திலேயே தர்ஷன் நியாயத்தை மறந்து நடப்பது தெரிந்தது.

நியாயத்தை மறக்கும் தர்ஷன்

நியாயத்தை மறக்கும் தர்ஷன்

இந்நிலையில் கவின், சாண்டி, லாஸ்லியா மற்றும் முகெனுடன் சேர்ந்து கொண்டு தனது ஒரிஜினாலிட்டியை இழந்து வருகிறார். மதுமிதா விஷயத்திலேயே தர்ஷன் நியாயத்தை மறந்து நடப்பது தெரிந்தது.

ரசித்த தர்ஷன்

ரசித்த தர்ஷன்

அதோடு பாட்டுப்பாடி மதுமிதா மற்றும் சேரனை கவின் கேங்க் வெறுப்பேற்றிய போதும் அவர்களை எதிர்த்து கேட்காமல், கூடவே சேர்ந்து கும்மியடித்தார் தர்ஷன். எப்போதும் பாத்ரூமுக்குள் உட்காந்துகொண்டு மற்றவர்கள் புறணி பேசுவதை ரசித்து வருகிறார்.

மாறிவிட்ட தர்ஷன்

மாறிவிட்ட தர்ஷன்

குறிப்பாக சாண்டியும், கவினும் சேரன் குறித்து தவறாக பேசும்போது அவர்களை நண்பர்கள் என்று எதுவும் கேட்காமல் இருக்கிறார் தர்ஷன். இதுவரை இருந்த தர்ஷன் ஒரு மாதிரியாகவும் இப்போது உள்ள தர்ஷன் ஒரு மாதிரியாகவும் உள்ளனர்.

உதாசீனப்படுத்தும் தர்ஷன்

உதாசீனப்படுத்தும் தர்ஷன்

மேலும் கஸ்தூரி விஷயத்திலும் தர்ஷனின் நடவடிக்கை வேறு மாதிரியாக உள்ளது. கஸ்தூரி என்ன பேசினாலும் நீங்கள் புதிதாக வந்தவர்கள் எதுவும் பேசக்கூடாது என அவரை உதாசீனப்படுத்தி வருகிறார்.

எல்லை மீறும் தர்ஷன்

எல்லை மீறும் தர்ஷன்

கவினின் பேச்சைக் கேட்டே தர்ஷன் இவ்வாறு நடந்துகொள்கிறார். மேலும் சேரன் விஷயத்திலும் தர்ஷன் எல்லை மீறி செல்வதாகவே தெரிகிறது.

அவரே புதுசா வந்திருக்காரு

அவரே புதுசா வந்திருக்காரு

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கஸ்தூரி, தான் எது பேசினாலும், தர்ஷன் தன்னை நீங்கள் புதுசா வந்தவர் பேசக்கூடாது என்று கூறுகிறார் என கமலிடம் கூறினார். இதனைக்கேட்ட கமல், அவரே புதுசா வந்திருப்பவர்தானே என அவர் மாறிவிட்டதை மறைமுகமாக சாடினார். இதனைக் கேட்டு தர்ஷன் முகம் மாறியதை காண முடிந்தது.

மீண்டும் நிரூபித்த கமல்

மீண்டும் நிரூபித்த கமல்

கமல் இதுபோன்று மறைமுகமாக தாக்குவதில் வல்லவர். வனிதா பிரச்சனையை தூண்டி விடுகிறார் என்பதை தூண்டுகோளாய் இருக்கிறார் என இன்டைரக்ட்டாக கூறினார். அதேபோல் அபியை கூட உங்களுக்கு தெரியாத தல யா என கேட்டு அசத்தினார். பல இடங்களில் கமல், மறைமுகமாக புகழ்வதிலும் சாடுவதிலும் சிறந்த கலைஞர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X