For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரில்லர் காட்சியை போலிருந்தது.. என்னை விடவும் சிறப்பாக செய்தார்.. லாஸ் அப்பாவுக்கு கமல் புகழாரம்!

    |

    சென்னை: ஒரு அப்பாவாக என்னைவிடவும் சிறப்பாக செய்தார் என லாஸ்லியாவின் அப்பாவை நடிகர் கமல்ஹாசன் புகழ்ந்துள்ளார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா, சக போட்டியாளரான கவின் மீது காதல் கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியது. இதனையொட்டி போட்டியாளர்களின் குடும்பத்தினரை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

    எல்லாமே தூக்கல்... அந்த இடத்தில் டாட்டூ.. படு கவர்ச்சியாக பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த அபிராமி!எல்லாமே தூக்கல்... அந்த இடத்தில் டாட்டூ.. படு கவர்ச்சியாக பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த அபிராமி!

    அப்பா கோபம்

    அப்பா கோபம்

    அந்த வகையில் கடந்த புதன் கிழமை லாஸ்லியாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். லாஸ்லியாவின் அப்பா பத்தாண்டுகளுக்கு பிறகு மகளை பார்த்தும் அன்பை வெளிப்படுத்தாமல் கோபத்துடன் நடந்து கொண்டார்.

    காரித்துப்பும்படி

    காரித்துப்பும்படி

    காரணம், லாஸ்லியா கவின் மீது கொண்ட காதலும், அவர் பிக்பாஸ் வீட்டில் நடந்து கொண்டவிதமும்தான். பின்னர் லாஸ்லியாவை என்ன சொல்லிவிட்டு வந்தாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய் என படுகோபமாக கேட்டதோடு, மற்றவர்கள் காரித்துப்பும்படி செய்துவிட்டாயே என்று அழுதார்.

    கட்டிப்பிடித்த அட்வைஸ்

    கட்டிப்பிடித்த அட்வைஸ்

    ஆனால் கவினிடம் அவர் கோபத்தை காட்டவில்லை. மாறாக ஆம்பளை அழக்கூடாது, விளையாட வந்தீர்கள், விளையாடிவிட்டு போங்கள், கேமை கேமாக பாருங்கள் என்று கூறி கவினை கட்டிப்பிடித்து அறிவுரை கூறினார்.

    த்ரில்லர் காட்சியை போல்

    த்ரில்லர் காட்சியை போல்

    இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் லாஸ்லியா அப்பாவின் விஷயம் குறித்து பேசும் கமல், கவினிடம் லாஸ்லியாவின் அப்பா உங்களிடம் நடந்து கொண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. அவர் உங்கள் மீது கோபத்தை காட்டவில்லை. ஒரு த்ரில்லர் காட்சியை பார்ப்பது போல் இருந்தது.

    என்னை விட சிறப்பாக

    என்னை விட சிறப்பாக

    நான் ஒரு அப்பாவாக என்ன செய்திருப்பேனோ அதைவிட சிறப்பாகவே செய்தார் என்றார். கமல் பேச்சைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸும் ஆடியன்ஸும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    அப்பாவுக்கும் ஆர்மி

    அப்பாவுக்கும் ஆர்மி

    லாஸ்லியா அப்பாவின் பிஹேவிங் பார்வையாளர்களுக்கும் பிடித்திருந்தது. அவரது ரசிகர்கள் அவருக்கும் ஆர்மி ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Kamalhassan praises Losliya's father in Biggboss. He liked the behaving with Kavin When he was inside of the house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X