திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல்.. கைப்பட கவிதை எழுதிக்கொடுத்து அசத்தல்!

Recommended Video

Bigg Boss Title Winner| Sherin Evicted | வீட்டை விட்டு வெளியேறிய ஷெரின்

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளை முன்னிட்டு இன்று பிக்பாஸ் வீட்டிற்கு சென்றார் கமல்ஹாசன்.

105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டியுள்ளது நிகழ்ச்சி.

நடிகர் கமல்ஹாசனும் வொய்ட் அன்ட் பிளாக்கில் அசத்தலாக வந்துள்ளார். பிக்பாஸ் வீடும் சீரியல் லைட்ஸ், மலர்கள் என அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கமலுக்கு வரவேற்பு

கமலுக்கு வரவேற்பு

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் திடீரென பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அவரை சாண்டி, முகென், ஷெரின், லாஸ்லியா ஆகிய நான்கு பேரும் ஆரத்தழுவி வரவேற்றனர்.

வேறு ஒன்று இருக்கு

வேறு ஒன்று இருக்கு

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் கடந்த முறை ஃபைனலின் போது வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு டீ போட்டு கொடுத்ததாக கூறினார். இந்த முறை என்ன கொடுக்கலாம் என்று கேள்வி கேட்ட கமல் தானாகவே உங்களுக்கு இந்த முறை வேறு ஒன்று இருக்கு என்றார்.

படிக்காமல்

படிக்காமல்

மேலும் உங்களுக்காக நானே கவிதை எழுதிருக்கிறேன் என்று கூறிய கமல், ஸ்டோர் ரூமில் உள்ளது போய் எடுத்து வாருங்கள் என்றார். உடனே சாண்டியும் முகெனும் உள்ளே செல்ல படிக்காமல் கொண்டு வரவேண்டும் என்றார் கமல்.

கிஃப்ட் கொடுத்த கமல்

கிஃப்ட் கொடுத்த கமல்

இதனை தொடர்ந்து கண்களை மூடியப்படியே எடுத்து வந்தார் சாண்டி. நான்கு பேருக்கும் தனித்தனியாக எழுத்தப்பட்ட கவிதை ஃபிரேம் செய்யப்பட்ட கமல் கையில் கொடுக்கப்பட்டது. அதனை பெற்ற கமல் தனது வாயாலேயே படித்து, யாருக்காக எழுதினாரோ அவர்களிடம் கொடுத்தார்.

சென்னை ஸ்லாங்

சென்னை ஸ்லாங்

சாண்டிக்கு சென்னை செந்தமிழில் அவரது ஸ்டைலில் கவிதை எழுதிய கமல் அதனை அதே ஸ்லாங்கில் படித்து அசத்தினார். இதேபோல் லாஸ்லியாவுக்கு யா.. யா.. என்று முடியும் படி கவி நயத்துடன் கவிதை எழுதியிருந்தார்.

பாட்டாக பாடி

பாட்டாக பாடி

ஷெரினுக்கு ஆங்கிலத்தில் கவிதை எழுதியிருந்த கமல், அதில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு எடை குறைந்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். மலேசிய பாடகரான முகெனுக்கு, தனது கவிதையை பாட்டாக பாடி அசத்தினார் கமல்.

புறப்பட்டார்

புறப்பட்டார்

தங்களுக்கு உலக நாயகன் கமல்ஹாசனே தனது கைப்பட எழுதி, வாசித்து கொடுத்த கவிதையை பெற்று கொண்ட போட்டியாளர்கள் ஆரத்தழுவி நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து பேசிய கமல், வெளியே சிலர் காத்திருப்பதாக கூறிவிட்டு சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X