Bigg Boss: நைட் 2 மணி.. ஸ்மோகிங் அறையில் கம்ருதினுடன் பாரு... விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் டாஸ்க்கை சரியாக செய்கிறார்களோ இல்லையோ.. காதல் கன்டென்ட் கொடுப்பதில் குறியாக இருக்கிறார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில்லை இருந்து கம்ருதீன், அரோரா பின்னால் சுற்றிக்கொண்டு இருந்தார். பின், அவருடைய டிராக் மாறி பார்வதி பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார். இது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி இணையவாசிகள் அவர்களை திட்டித்தீர்த்தனர்.
இதையடுத்து, வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்த சாண்ட்ரா, பிரஜன், திவ்யா அனைவரும் உள்ளே வந்து, பாருவை கண்டித்து வெளியில் மோசமாக பேசுகிறார்கள். உங்க அம்மா பார்த்தா எவ்வளவு வருத்தப்படுவார்கள் என கூறினார்கள். இதனால், வெளியில் மக்கள் நம்மை திட்டுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்ட பாரு, கம்ருதீனை அழைத்து உனக்கும் எனக்கும் ஒரு வைப் இருக்கிறது. அது எதுவாக இருந்தாலும், நாம் வெளியில் சென்று பார்த்துக் கொள்ளலாம் உள்ளே எதுவும் அதைப்பற்றி பேச வேண்டாம் என கூறினார்.

கடுப்பான கம்ருதீன்: இதனால் கடுப்பான கம்ருதீன், தனது டிராக்கை மாற்றிக் கொண்டு மீண்டும் அரோரா பின்னால் சுற்ற ஆரம்பித்து பார்வதியை வெறுப்பேத்தினார். இவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுவதைப்பார்த்து கடுப்பான பார்வதி பல இடங்களில் அரோராவை கடுமையாக விமர்சித்து பேசினார். தற்போது மீண்டும் பாரு, கம்ருதீன் இருவரும் பிக் பாஸ் வீட்டில் ஜோடியாக வலம் வர ஆரம்பித்து இருக்கிறார்கள். நேற்றைய பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளர்களிடம் தனித்தனியாக வீடியோ போட்டு காட்டப்பட்டது. அதில், கம்ருதீனின் நண்பன் ஆர்யன், விளையாட்டை ஒழுங்காக தனியாக விளையாடு குறிப்பாக பாருவுடன் சேராதே என்று கூறினார். இந்த விஷயத்தை கம்ருதீன் பார்வதியிடம் சொல்ல, பார்வதி, நான் உன் விளையாட்டை கெடுக்கவில்லை, நாம சேர்ந்தே இருப்போம், வெளியில் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று பேசி கம்ருதீனை மூளை சலவை செய்தார்.
ஸ்மோக்கிங் ரூமீல்: இதையடுத்து, தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் நள்ளிரவு 2 மணி அளவில், பாரு மற்றும் கம்ருதீன் இருவருமே ஸ்மோக்கிங் அறையில் இருந்து வெளியே வருகின்றனர். அந்த நேரம் FJ துணியை காயப்போட்டுக்கொண்டு இருக்க வியானா அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது, பாரு மற்றும் கம்ருதீனும் ஸ்மோக்கின் அறையில் இருந்து வெளியே வந்தை பார்த்துவிட்டு, ஏய் என்னடா, ரெண்டு பேரும் அந்த ரூமில் இருந்து வருகிறார்கள் என்று சொல்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பார்வதியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பார்வதியும், கம்ருதீனும் வரம்பு மீறி போகிறார்கள் அவர்களை வெளியே அனுப்புங்கள் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











