Kamruddin: வாழ்க்கையில் அடுத்த ஸ்டெப்பை எடுத்து வைத்த கமருதீன்.. பார்வதி இல்லாம அது நடக்குமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் போட்டியாளராக களம் இறங்கியவர் சின்னத்திரை நடிகர் கமருதீன். இவர் தற்போது புதிதாக கார் ஒன்று வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள கமருதீன் தனது வாழ்வின் புதிய தொடக்கம் என்றும் குறிப்பிட்டார். இந்த வீடியோவில் அவரது நண்பர்கள் அவருடைய சகோதரியின் கணவர் அவருடைய தோழி பார்வதி உள்ளிட்டோர் உள்ளனர்.

சின்னத்திரையில் நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கமருதீன். சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற நோக்கம் இருந்ததால், பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த உடனே அதை பயன்படுத்திக் கொண்டார். இவரது துணிச்சலான ஆட்டம் பலருக்கும் பிடித்திருந்ததால் இவருக்கான ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு சென்றது. குறிப்பாக இவரும் கானா வினோத்தும் இணைந்து கொண்டு மற்றவர்களை கலாய்ப்பது இவரும் அரோராவும் இணைந்து பல விஷயங்களை பரிமாறிக் கொண்டது உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Kamruddin Takes a New Step in Life New Car Purchase with VJ Parvathi Sparks Buzz

பிக் பாஸ் தமிழ் சீசன் 9இன் முதல் வாரத்திலிருந்து பிரச்சனை மேல் பிரச்சனை உருவாக்கிக் கொண்டிருந்த போட்டியாளரான பார்வதியுடன் கமருதன் நெருங்கிப் பழக தொடங்கியதில் இருந்து தான் அவருக்கான பிரச்சனை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் போது பார்வதியுடன் இணைந்து சக போட்டியாளரான சாண்ட்ரா மீது மிகவும் மோசமான தாக்குதலை நடத்தி அவரை எட்டி உதைத்து காரில் இருந்து வெளியே தள்ளினர். இதனை சக போட்டியாளர்கள் கடுமையாக கண்டித்தனர்.

பார்வதி: இதனால் ரசிகர்கள் பலரும் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்ட் கொடுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தனர். அதேபோல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி இருவருக்கும் ரெக்கார்டு கொடுத்து வெளியே அனுப்பினார். இதனால் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் சீசன் 9ஐப் பாராட்டினார்கள்.

Kamruddin Takes a New Step in Life New Car Purchase with VJ Parvathi Sparks Buzz

நண்பர்: வீட்டை விட்டு வெளியேறும் போது பார்வதியை வழி அனுப்ப சக போட்டியாளர்கள் யாரும் வரவில்லை. ஆனால் கமருதீன் சாண்ட்ரா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது கம்ருதீனின் நண்பனான கானா வினோகம்ருதீனை வழி அனுப்ப வந்தார். கானா வினோத்தை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு அழுதபடியே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் கமருதீன். அதேபோல் இந்த சீசன் வெற்றியாளரான திவ்யாவும் கமருதீனை வழி அனுப்ப வந்தார். அப்போது இந்த வீட்டை விட்டு வெளியே போகும் போதே நீ முடிவு செய்து கொள் பார்வதியை இனி உன் வாழ்க்கையில் சந்திக்காதே என்றெல்லாம் அட்வைஸ் கொடுத்து அனுப்பினார்.

புதிய கார்: ஆனால் கமருதீன் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னரும் பார்வதியுடன் நன்கு பழகி வருகிறார். அவர்கள் இருவரும் இணைந்து சுற்றுலா செல்வது வெளியே செல்வது போன்ற புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கமருதீன் புதிதாக கார் வாங்க சென்றபோது தனது நண்பர்களுடன் இணைந்து பார்வதியையும் அழைத்துக் கொண்டு சென்றார். இவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் பிக்பாஸிலே பேசிக் கொண்டிருந்தார்கள். கார் வாங்க இருவரும் ஒன்றாக சென்றுள்ளதால் பலரும் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X