யாருக்கு ரெட் கார்டு.. கம்ருதீனை கொண்டாடிய மக்கள்.. காணாமல் போன பார்வதி!

சென்னை: பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள் இருந்த நிலையில், ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு தற்போது. சபரி, அரோரா, விக்ரம், திவ்யா என நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். பிக் பாஸில் டாப் 5 போட்டியாளரான கம்ருதீன் மற்றும் பார்வதி இருப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் ரெட் கார்ட் பெற்று வெளியேறினார்கள்.

சாண்ட்ராவை காரில் இருந்து எட்டி மிதித்து தள்ளிவதற்காக அவர்கள் இருவருக்கும் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இணையத்தில் பலரும், ரெட் கார்ட் கொடுத்தது சரி தான். பார்வதி தான் இந்த பிரச்சனைக்கு மூலக்காரணம் அவருக்கு 0ரெட் கார்டு கொடுக்கப்பட்டது சரியானதுதான். ஆனால், கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்திருக்கக் கூடாது. பார்வதி, கம்ருதீனை காதல் வலையில் விழ வைத்து, கம்ருதீனின் கோவத்தை சரியாக பயன்படுத்தி கடைசியில் வெளியேற்றி விட்டார். இதில் பாதிக்கப்பட்டது கம்ருதீன் தான், சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டார் என தொடர்ந்து இணையத்தில் கம்ருதீனுக்கு பலரும் ஆதரவுகளை தெரிவித்து வந்தனர்.

Bigg boss Kamruddin
Photo Credit:

கம்ருதீனை கொண்டாடும் ரசிகர்கள் : ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலான நிலையில், கம்ருதீன் முதல் முறையாக வெளியே வந்துள்ளார். அவரை ரசிகர்கள் மாலை அணிவித்து, தலையில் கிரீடம் வைத்து, தூக்கிக் கொண்டாடி உள்ளனர். கம்ருதீன் டைட்டிலை பெறவில்லை என்றாலும், கம்ருதீன் மக்கள் மனதை வென்று விட்டார் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சியாக இருக்கிறது. ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்ட் பெற்று வெளியேறிய பார்வதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'யாருக்கு ரெட் கார்டு' நான் தான் டைட்டில் வின்னர் என்பது போல பதிவினை வெளியிட்டு இருந்தார். அதைப்பார்த்த பலர் இன்னும் நீ திருந்தல, அடங்காதா பாரு என கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மற்றபடி பார்வதி, வெளியில் வந்தால் ரசிகர்கள் வெச்சு செய்துவிடுவார்கள் என தெரிந்து வெளியில் தலைகாட்டாமல் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X