»   »  சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா!

சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Senthil and Iniya
சரவணன் - மீனாட்சி தொடர் நாயகன் மிர்ச்சி செந்தில் தற்போது 'கண் பேசும் வார்த்தைகள்' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார்.

ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜே வாக பணியை தொடங்கிய செந்தில், மதுரை சீரியல் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் களம் இறங்கினார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சரவணன் - மீனாட்சி தொடரில் நடித்து வரும் இந்த சீரியல் ஹீரோ சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் கண் பேசும் வார்த்தைகள்.

இந்தப் படத்தை ஸ்ரீபாலாஜி சினி கிரியேஷன்ஸ் மற்றும் கான்சப்ட் பவுண்டேஷன் சார்பில் ஆர்.சரவணன் தயாரித்து வருகிறார். இவருக்கு நாயகியாக 'வாகை சூடவா' நாயகி இனியா நடிக்கிறார். கிராமத்து குயிலாக வலம் வந்த இனியா இதில் மாடர்னாக நடித்திருக்கிறராம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்றுள்ளது. அடுத்தகட்டமாக கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூரில் நடைபெற இருக்கிறதாம்.

இப்படத்தினை கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.பாலாஜி இயக்குகிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் உறவினர் ஆவார். எஸ்.பிக்சர்ஸ் தயாரித்த படங்களில் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியவர். 'உயிர்' படத்தை தயாரித்திருக்கிறார்.

English summary
Saravanan Meenakshi Serial hero is going to act in the new movie Kan Pesum Vaarthaigal.
Please Wait while comments are loading...