Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சீக்கிரத்துலயே வருதுப்பா கனா காணும் காலங்கள் 2 சீரியல்...சூப்பர் டூப்பர் ப்ரமோ வெளியீடு!
சென்னை : விஜய் டிவியின் சூப்பர் டூப்பர் சீரியலாக ஒளிபரப்பான தொடர் கனா காணும் காலங்கள்.
Recommended Video
மெகா ஹிட்டடித்த இந்தத் தொடரின் சீசன் 2 விரைவில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சூப்பரான ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்காக பாரம்பரியத்தை உடைத்தாரா எலிசபெத் ராணி
கனா காணும் காலங்கள் தொடர்
விஜய் டிவியில் பள்ளிக் காலங்களை மையமாக வைத்து ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக இன்றுவரை இந்த தொடர் விளங்குகிறது. மாணவர்களின் மனநிலை மற்றும் வாழ்க்கையை அழகாக வெளிப்படுத்தியது இந்த தொடர்.
வெற்றிகரமான தொடர்
பள்ளி மாணவர்கள் வாழ்வியலை மையமாக வைத்து வெளியாகி இந்த தொடர் வெற்றி பெற்றது. கனா காணும் காலங்கள் தொடர் மூலம் பிரபலமான நடிகர்கள் இன்று சினிமாவிலும் தங்களது முத்திரையை பதித்து வருகின்றனர். அவர்களின் நடிப்பு இந்த தொடரில் சிறப்பாக அமைந்திருந்தது.
அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு
இளம் ரசிகர்களை கவனத்தில் கொண்டு வெளியான இந்தத் தொடரின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் விஜய் டிவி வெளியிட்டது. இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளதாகவும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக வெளியாக உள்ளதாகவும் அறிவித்தது.
தொடரின் ப்ரோமோ வெளியீடு
இந்த புதிய தொடரில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த எதிர்பார்ப்பும் எகிறிய நிலையில், தற்போது தொடரின் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் பின்புலத்தில் சிறப்பான பாடலுடன் மாணவர்கள் உற்சாக ஆட்டம் போடுகின்றனர். இவர்களுக்கு துணையாக அழகான ஆசிரியை ஒருவரும் காணப்படுகிறார்.
அழகான ஆசிரியை -அழகான காதல்
இவருக்கு பின்னால் ஒரு அழகான காதலும் காட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் குறும்பிற்கும் ஜாலியான காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் இந்த பிரமோ உள்ளது. இந்த சீசன் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அழகான மாணவர் உலகம்
மாணவர்கள் உலகம் என்பது மிகவும் அழகானது. அதை மிகவும் அழகாக காட்டிய தொடர் கனா காணும் காலங்கள். இந்தத் தொடர் ஒளிபரப்பான காலத்தில் மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது வெளியாகவுள்ள புதிய தொடர் வெளியாகும் முன்பே வரவேற்பை பெற்றுள்ளது.
வைரலாகும் பிரமோ
முக்கியமாக இதன் பிரமோ தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்கள், அவர்களுக்குள்ளான புரிதல்கள், சண்டைகள், விருப்பங்கள் என அனைத்தையும் இந்த தொடர்ந்து கொண்டுவரவுள்ளது. மேலும் மாணவர்களின் மனதை அறிந்த ஆசிரியர்களும் இந்த ஹைலைட்டாக உள்ளது தெரிகிறது. இந்த தொடருக்காக காத்திருப்போம்.