வரிசையா வாங்கப்பா.. கண்மணி உங்களுக்கு ஒரு மணி நேரம்.. சன் டிவி ரேஷனில் அடுத்த ஸ்லாட்!
சென்னை: கண்மணி சீரியலுக்கு வரும் ஞாயிறு இரவு ஒரு மணி நேரத்தை சன் டிவி ஒதுக்கித் தந்து இருக்கிறது. ஞாயிறு ஒரு மணி நேரம் ஒதுக்குவது என்பதை ராசாத்தி சீரியலுக்கு ஒதுக்கித் தந்ததில் இருந்து இதைத் தொடர்ச்சியாகவே செய்து வருகிறது சன் டிவி.
சித்தி 2 சீரியல் ஆரம்பித்த அன்றைய தினம் ராசாத்தி சீரியலுக்கு விடுமுறை கொடுத்து இருந்த சன் டிவி அதற்கு பதிலாக ஞாயிறு ஒரு மணி நேரத்தை ஒதுக்கித் தந்தது. அன்றைய தினம் ரேட்டிங்கில் நல்ல இடத்தைப் பிடித்தது ராசாத்தி சீரியல்.
ராசாத்தி சீரியலை சீரியல் ஆர்வளர்கள் விரும்பிப் பார்க்கவும் செய்தனர். அதனால், மற்ற சீரியல்களுக்கும் ரசிகர்களை பெருக்கும் நோக்கத்தில் அடிக்கடி அடுத்தடுத்த சீரியல்களுக்கு ஞாயிறு ஒரு மணி நேரத்தை லக்கிப் பிரைஸாக ஒதுக்கித் தந்து சீரியல்களில் இழுவையாக இருக்கும் விஷயங்களை அந்த ஒரு மணி நேரத்தில் முடித்து விடுங்கள் என்றும் கட்டளையிட்டு வருகிறது சன் டிவி.

பேக் டு பேக் படங்கள்
கடந்த வருடம் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து சக்கை போடு போட்டுக்கொண்டு இருந்த நேரத்தில், சன் டிவி தங்களது ரசிகர்களை விஜய் டிவி பக்கம் திரும்ப விடாமல் செய்ய ஞாயிறு டபுள்ஸ் சென்று ஆரம்பித்து ஞாயிறு மாலை 6 மணிக்கு ஆரம்பித்து வரிசையாக இரண்டு படங்கள் ஒளிபரப்பி சினிமா ரசிகர்களை சன் டிவி முன் கட்டிப்போட்டு வைத்தது.

நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக
அடுத்து விஜய் டிவி மற்றும் மற்ற சானல்களின் நிகழ்ச்சிகளுக்குப் போட்டியாக சன் டிவி ஞாயிறு டபுள்ஸை கைவிடாமல், கை வசம் வைத்திருக்கும் படங்களை வைத்து இன்னமும் மற்ற சசானல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது. இதே நேரத்தில் சன் டிவி தனது சீரியல்களுக்கும் ரேட்டிங் வரும் வகையில், ஞாயிறு அன்று ஒரு மணி நேரத்தை ஒதுக்கி புதிய ரசிகர்களை இழுக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.

கண்மணி சீரியல்
முதலில் ராசாத்தி, அடுத்து ரோஜா, கல்யாண வீடு சீரியல்களுக்கு ஞாயிறு ஒரு மணி நேரத்தை சிறப்பாக ஒதுக்கித்த தந்த சன் டிவி இப்போது கண்மணி சீரியலுக்கு வரும் ஞாயிறு ஒரு மணி நேரத்தை ஒதுக்கி அறிவித்து வருகிறது. இதில் நடிகர் சஞ்சீவ், பூர்ணிமா ஜெயராம் கதாபாத்திரங்கள் அனைவருக்கும் பிடித்தது என்றாலும், வாடகை தாய் முத்துச்செல்வி, குழந்தை பாக்கியம் இல்லாத சவுந்தர்யா என்றும் கதை சுவாரஸ்யமாக நகர்ந்துக்கொண்டு இருக்கிறது.

அத்தை வளர்மதி
ஆகாஷ் மனைவி வளர்மதி.. இவள் ஜென்ம எதிரியாக நினைக்கும் அத்தை என்று கதையின் இழுவையை முடிக்க இந்த ஒரு மணி நேரத்தை கண்மணி சீரியல் குழு பயன்படுத்திக்கொள்ளும் என்றே சீரியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அடியே அத்தைக்காரி.. நீ செத்தடி என்று மரியாதை இல்லாமல் பேசும் வளர்மதியின் சுக்கோத் தனத்துக்கு ஞாயிறு ஒளிபரப்பில் விடுதலை கொடுப்பார்களா என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











