சீரியல் நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் விசேஷம்.. மடிசார் மாமியாக மாஸ் காட்டிய நடிகை!

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை கண்மணி மனோகரன் வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அந்த போட்டோவை பகிர்ந்து தனது மகிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா' டூ 'மகாநதி': கண்மணியின் சின்னத்திரை பயணம் விஜய் டிவியின் பிளாக்பஸ்டர் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' தொடரில் 'அஞ்சலி' என்ற வில்லத்தனம் கலந்த நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கண்மணி மனோகரன். தொடர்ந்து ஜீ தமிழின் 'அமுதாவும் அன்னலட்சுமியும்' மற்றும் விஜய் டிவியின் 'மகாநதி' தொடர்களில் முதன்மை பாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சன் டிவியின் பிரபல தொகுப்பாளர் அஷ்வத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 'துருவ் யாத்ரா அஷ்வத்' என்ற அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

Sun Tv Kanmani Manoharan
Photo Credit:

மடிசார் மாமியாக கண்மணி: இந்நிலையில், கண்மணி தனது மாமனார்-மாமியாரின் 60-வது திருமண நாளை முன்னிட்டு அவர்களுக்கு முறைப்படி 60-ஆம் கல்யாண வைபவத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார். இந்த விழாவில் நடிகை கண்மணி பக்கா பிராமணத்து ஸ்டைலில் 'மடிசார்' புடவை கட்டி, நெற்றிச் சுட்டி, மல்லிகைப்பூ என அசல் மாமியாக மாறி மாஸ் காட்டியுள்ளார். பட்டு வேட்டி-சட்டையில் கணவர் அஷ்வத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகின்றன.

Sun Tv Kanmani Manoharan
Photo Credit:

ஏன் இவ்வளவு வீண் செலவு?: இந்த விழாவிற்காக மாதக்கணக்கில் திட்டமிட்டு கண்மணி செலவு செய்ததைப் பார்த்த சிலர், இந்தக் காலத்தில் இதற்கெல்லாம் ஏன் இவ்வளவு வீண் செலவு செய்கிறீர்கள்? அந்தப் பணத்தைச் சேமித்து வீடு வாங்கலாம், தங்கம் வாங்கலாம் அல்லது பிசினஸில் முதலீடு செய்யலாமே? என அறிவுரை என்ற பெயரில் விமர்சித்தனர். அதற்கான எங்கள் பதில் ஒன்றுதான்... எங்கள் பெற்றோரைப் பராமரிப்பதில் நாங்கள் ஒருபோதும் தவறியதில்லை, இனியும் தவறப்போவதில்லை. அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாகப் பார்ப்பதும், அவர்களின் அன்பைக் கொண்டாடுவதும், அவர்களுடன் வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்கும் இனிய நினைவுகளை உருவாக்குவதும்... இந்த உலகத்தில் இருக்கும் எந்தவொரு சொத்து அல்லது பண முதலீட்டையும் விட எங்களுக்கு மிக மேலானது!"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X