Kanmani serial: முத்துச்செல்வி அநியாயத்துக்கு இப்படி பண்றாளே!

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் கண்ணனும், சவுந்தர்யாவும் முத்துசெல்வியையும், தங்கை தங்கத்தையும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்த பின்னரும், முத்துச்செல்வி, அனைவர் மனதும் நோகும்படி நடந்துக் கொள்கிறாள்.

சவுந்தர்யா சின்னவரை மிகவும் ஆழமாக காதலிப்பதை ஆகாஷ் மூலம் தெரிந்துக் கொண்ட பின்னர் மிகவும் ஓவராகா நடந்துக்கறா. எல்லாரையும் வெடுக்கு வெடுக்குன்னு பேசறா. என்னதான் சின்னவரை சவுந்தர்யாவுக்கு விட்டுக் கொடுப்பதாக இருந்தாலும் இப்படியா?

இப்படிப்பட்ட பெண்ணுக்கு எடுத்த எடுப்பிலேயே தோப்பு வீட்டில் சின்னவரு குடி வச்சதும், சின்னவரு மீது காதல் வருவது போல காண்பித்து இருப்பதே முதல் தவறுதானே...

தட்டி விட்டும்

தட்டி விட்டும்

முத்துச்செல்வி தனக்கு சவுந்தர்யாவின் அக்கா ஆரத்தி எடுக்க வந்தபோது, ஆரத்தி தட்டை தட்டி விட்டுட்டா. இதுவே அவள் நடிப்பு என்றாலும் முகம் சுளிக்கும்படி இருந்தது. முத்துச்செல்வியின் அந்த செயல். என்னதான் ஆச்சு இந்த முத்துசெல்விக்கு என்று எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே, அவங்க இனி அவுட் ஹவுசில் இருக்க வேண்டாம், இந்த வீட்டுக்கே வந்துருங்கன்னு சொல்லி அழைப்பு விடறாங்க.

முத்துச்செல்வி குடும்பத்துக்கு

முத்துச்செல்வி குடும்பத்துக்கு

மாடியில் ஒரு சொகுசு அறையை அவள் குடும்பத்துக்கு ஒதுக்கித்த தர்றாங்க.அந்த அறையில் தங்கிக்க குடும்பத்தோட வந்துடறாங்க. சரி, கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்னு, முதலில் தாலி எடுக்கப் போகலாம்னு விஜயலட்சுமியும், ராஜசேகரும் பேசிக்கறாங்க. முத்துசெல்வியின் அப்பாவிடம் இதை சொல்ல, சின்னவரே உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும் வாரீங்களான்னு முகத்தில் அடிச்ச மாதிரி கேட்டுட்டு, தன்னோட ரூமுக்கு போறா.

தாலி வாங்க

தாலி வாங்க

நம்ம ரெண்டு பேருக்கும்தானே கல்யாணம்...நம்ம ரெண்டு பேரும் போயி தாலி வாங்கிகிட்டு வந்துடலாம்னு சொல்றா. இதென்ன புதுப் பழக்கம்... கல்யாணம் கட்டிக்க போறவங்க எப்படி தாலி வாங்க போவாங்கன்னு சின்னவர் கேட்க, அதெல்லாம் முடியாது..உனக்கு கிறுக்கு புடிச்சு போச்சான்னு கேட்டுட்டு சின்னவரு வந்துடறார்.

விவாதம் செய்ய

விவாதம் செய்ய

முத்துச்செல்வி கேட்டது பற்றி கீழே அனைவரும் விவாதம் செய்துகொண்டு இருக்க, நான் அப்படி என்ன புதுசா கேட்டுட்டேன்...கட்டிக்கப் போறவ... ஆசைப்பட்டு கேட்டுட்டேன்.இதை கூடவா நிறைவேத்தி வைக்க மாட்டீங்கன்னு கேட்க, ராஜசேகர் சரிம்மா உன் இஷ்டம்னு ஒத்துக்கறார். என்னதான் சின்னவரை சவுந்தர்யா அம்மாவுக்கே வீட்டுக் கொடுக்க நினைத்தாலும் இப்படியா நடந்துக்குவாங்க.

ஆனா, ஒண்ணுங்க... இப்படியும் முத்துச்செல்வி நடந்துகிட்டு சின்னவரை கல்யாணமும் செய்துகிட்டா. இதெல்லாம் கதையை நகர்த்த நடக்கும் அட்டகாசம்தான்னு சீரியல்மேல வெறுப்பு வந்துரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X