Kanmani serial: பாவம் முத்துச் செல்வியை இப்படியா அடிப்பாங்க?

சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியலில் எல்லோரும் கூட்டு குடும்பமா வாழ்கிறார்கள். அண்ணன் தர்மதுரை மீது தம்பிக்கு எப்போதும் அலாதி பிரியம்..அதே போல அண்ணி விஜயலட்சுமி மீதும் பிரியம் அதிகம்.

ஆனால், இவரின் மனைவி கிருஷ்ணவேணி அப்படி இல்லை. அதோடு, தர்மதுரையின் தங்கைகள் இருவரும் எப்போது அண்ணன் குடும்பத்தை கெடுக்கலாம், அதாவது அண்ணனின் மச்சான் கண்ணனை இந்த வீட்டை விட்டுத் துரத்தலாம்னு தங்கள் மகன்களை வைத்து வழி நடத்துபவர்கள்.

தர்மதுரை தம்பி மனைவி கிருஷ்ணவேணிக்கு, தர்மதுரையின் மனைவி விஜயலட்சுமி பேரில் இருக்கும் இந்த வீட்டை எழுதி தன் பேரில் வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற பேராசை.

தேவையா கூட்டு குடும்பம்

தேவையா கூட்டு குடும்பம்

இப்படி யாரை எப்போது வீட்டை விட்டுத் துரத்தலாம், யார் குடியை எப்போது கெடுக்கலாம் என்று வீட்டுக்கு உள்ளேயே சதி காரர்கள் இருக்கிறார்கள். இப்படியும் ஒரு கூட்டு குடும்பம் தேவையா என்று பார்ப்பவர்களுக்கு எண்ணம் தோன்றுகிறது. ஒருத்தரை ஒருத்தர் கடிச்சு, குதறிகிட்டும் வஞ்சனை வைத்துக் கொண்டும் கூட்டு குடும்பத்தில் வாழ்வதை விட , சொத்துக்களை முறையாகப் பிரித்துக் கொண்டு தனித் தனியாக வாழ்வதுதான் நல்லது?

முத்துச்செல்வி ஏழையாக

முத்துச்செல்வி ஏழையாக

ஏழையாகப் பிறந்ததை விட ஒரு பாவமும் அறியாத முத்துச்செல்வி, சின்னவரை காதலிச்சது தப்புன்னு சொல்லமுடியாது.ஆனால், சின்னவரு கண்ணன் தனது அக்கா மகளான சவுந்தர்யாவை காதலித்து, பின்னர் ஏமாந்து போனதில், எதாவது ஒரு பெண்ணை கல்யாணம் செய்துக்கத்தானே போகிறோம். அது முத்துச்செல்வியாக இருந்தால் என்னன்னு மிக யதார்த்தமாக முடிவு எடுப்பதும், விளக்கம் சொல்வதும் மிக நன்றாக இருக்கிறது.

ஏழைகள் மனதில்

ஏழைகள் மனதில்

ஏழைகள் மனசு எப்போதும் பணக்கார மனசு போல.. தான் விரும்பிய சின்னவருக்கு இன்னமும் அக்கா பெண் சவுந்தர்யா மேல உசிருக்கு உசிரான பாசம் இருக்கிறது, சவுந்தர்யா அம்மாவுக்கும், சின்னவரு மேல காதல் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்ட முத்துச்செல்வி இருவரும் சேர்ந்து வாழ்வதுதான் சரி என்று முடிவு செய்கிறாள். போவதற்கு முன், எஜமானி அம்மா விஜய லட்சுமிக்கு கிருஷ்ணவேணி அம்மாவால் ஏற்பட இருக்கும் நம்பிக்கை துரோகத்துக்கு ஒரு வழி செய்துவிட்டுப் போக வேண்டும் என்றும், சின்னவரு மனசில் தன்மீது வெறுப்பு வர வைக்க வேண்டும் என்றும் நினைத்து முத்துச்செல்வி படும் கஷ்டங்களும் ஏராளம்.

போலீஸ் ஸ்டேஷன்

போலீஸ் ஸ்டேஷன்


சின்னவரு தனது கல்யாணத்துக்கு வாங்கிக் கொடுத்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட நகைகளை திரும்பக் கொடுத்துவிட்டு, போய்விடலாம் என்கிற முடிவில் முத்துச்செல்வி எஜமானி வீட்டுக்கு வர,.பார்த்தால் நகையை காணவில்லை.இப்போது திருட்டு பட்டத்தை கிருஷ்ணவேணி அம்மா முத்துச்செல்வி மீது சுமத்த, திருப்பி அவங்க மீதே பழி போடுகிறாள் முத்துச்செல்வி. விளைவு, முத்துச்செல்வி,அவளது தங்கை தங்கம், அப்பா வீரையன் மூவரையும் கோவத்தில் தர்மதுரையின் தம்பி போலீசில் ஓப்படைத்து விடுகிறார்.

முத்துச் செல்வியை போலீஸ் போட்டு அடிக்கறாங்க..ஏழையாகப் பிறந்து,நல்லதே நினைத்ததை விட அவள் செய்த குற்றம்தான் என்ன?.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X