twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Kanmani Serial: திருந்த மாட்டீங்களா.. இன்னுமாய்யா ஒட்டு கேட்டுட்டு இருக்கீங்க!

    |

    சென்னை: சில உணர்வுகள் எல்லாம் இப்போது உள்ள இளம் தலைமுறையினருக்கு இல்லாமல் போகிறதோ என்கிற சந்தேகம் கூட வந்து விடுகிறது. அப்படி இல்லாமல் போகும் பட்சத்தில் அவர்களுக்கு எப்படி இவைகளைக் கற்றுத் தருவது?

    குறிப்பாக சீரியல்களில் ஒட்டுக் கேட்பது என்பதை இளம் வயதினரும் செய்கிறார்கள், மூத்தவர்களும் செய்கிறார்கள். சன் டிவியின் கண்மணி சீரியலில் வளர்மதி ஒட்டுக் கேட்க கையாளும் புது யுக்தி கொஞ்சம் திகைக்க வைத்துள்ளது

    வளர்மதியை சைக்கோ என்பது போல காண்பித்து இயக்குநர் தப்பித்துக்கொண்டாலும், உண்மையில் ஒட்டுக்கேட்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டால், வளர்மதியின் யுக்தியை நிச்சயம் பார்ப்பவர்கள் கையாள்வார்கள்.

    ஒட்டுக் கேட்கும் வியாதி

    ஒட்டுக் கேட்கும் வியாதி

    வளர்மதிக்கு கிட்டத்தட்ட யாராவது பேசிக்கொண்டு இருந்தாலே அதை ஒட்டு கேட்டாக வேண்டும் என்கிற மன நிலை வந்துவிடுகிறது. இதற்கு இரண்டு போன் வைத்து இருக்கிறாள். யாரவது பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் ஒரு போனை சார்ஜ் போடுவது போல வைத்து விடுகிறாள். அதில் இருந்து தனது இன்னொரு போன் நம்பருக்கு டயல் செய்தும் விட்டு, நீங்க பேசிகிட்டு இருங்க.. நான் வரேன்னு சொல்லிட்டு கிளம்பறா.

    இன்னொரு போனில்

    இன்னொரு போனில்

    தனது அறைக்குச் சென்று தான் ஒளித்து வைத்திருக்கும் இன்னொரு போனில் அவர்கள் அங்கு என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்கிறாள். பார்க்கும்போதே ரொம்ப கேவலமா இருக்கு. நிச்சயமா இதை ஒரு இளம்பெண் செய்யத் துணிகிறாள் என்றால், கூச்ச உணர்வு துளியும் இல்லாதவர்கள்தான் இதைச் செய்வார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதையும் காண்பித்தால்

    இதையும் காண்பித்தால்

    பெட்ரூமில் எட்டிப் பார்ப்பது...புருஷன் பொண்டாட்டி பேசுவதை ஒட்டுக் கேட்பது... யாரவது வீட்டில் இருப்பவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது.. ஒட்டுக் கேட்டவர்கள் கேட்ட விஷயத்தை தங்களிடம் வந்து சொல்வதை கேட்பது இதெல்லாம் நடக்கும்போது எப்படி சிலர் உடல் கூசிப் போகுமோ... அதையும் ஒரு காட்சியாக காண்பிக்க வேண்டும். அல்லது அதை வசனமாக பேச வேண்டும்.

    தொட்டால் முடிக்க

    தொட்டால் முடிக்க

    ஒரு விஷயத்தைத் தொட்டுவிட்டால், அதை முடிக்கவும் சில காட்சிகள் வைத்தே தீர வேண்டும். இல்லாவிட்டால், இந்த மாதிரி உணர்வுகள் அதாவது ஒட்டுக் கேட்பது போன்ற தவறுகளை செய்யும்போது உடலும் மனமும் கூசிப்போகும் என்கிற உணர்வு என்று ஒன்று இருப்பதாக இளம் தலைமுறையினருக்குத் தெரியும். இல்லாவிட்டால், இது போன்ற காட்சிகளை பார்த்து சீரழிந்து போவார்கள்.

    English summary
    There are even some doubts that some emotions are missing for the younger generation now. If not, how can you teach them? Even if the director escapes by showing that he is a psycho, but the idea of ​​actually patching up, those who are sure of the strategy of the development will handle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X