ப்பா... ஒருவழியா உண்மையை போட்டுடைத்த கண்ணம்மா... ரசிகர்கள் பெருமூச்சு!
சென்னை : விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடர் முக்கிய மற்றும் முன்னணி தொடராக விளங்குகிறது.
இந்த தொடரில் தன்னுடைய குழந்தையின் அப்பா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார் கண்ணம்மா.
நீண்ட நாட்களாக தொடர்ந்து இந்த விஷயத்தில் தற்போது அவர் தனது மகளின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியல்
விஜய் டிவியின் முக்கிய மற்றும் முன்னணி தொடராக பாரதி கண்ணம்மா உள்ளது. நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவரும் இந்த தொடர் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் உள்ளது. தன்னுடைய கணவனை பிரிந்து வாழும் கேரக்டரில் கண்ணம்மாவாக இந்த தொடரில் ரோஷினி முன்னதாக நடித்து வந்தார். தற்போது அந்தக் கேரக்டரில் மற்றொருவர் நடித்து வருகிறார்.

லட்சுமியின் கேள்விக்கு பதில்
நீண்ட நாட்களாக லட்சுமியின் கேள்விக்கு பதில் சொல்வதாக கண்ணம்மா இழுத்துக் கொண்டிருந்தார். பிறந்தநாளின்போது அப்பாவை லஷ்மிக்கு அறிமுகப்படுத்துவதாக அவர் கூற, லட்சுமியும் ஆவலுடன் அந்த நாளுக்காக காத்திருந்தாள். வழக்கம்போல அந்த நாளில் ஏதாவது சொல்லி இயக்குநர் கதையை இழுத்தடிப்பார் என்றே ரசிகர்கள் நினைத்தனர்.

ரசிகர்களை ஏமாற்றாத இயக்குநர்
ஆனால் இந்த முறை ரசிகர்களை இயக்குநர் ஏமாற்றவில்லை. தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள பிரமோவில் லட்சுமியிடம் கண்ணம்மா உண்மையை கூறுகிறார். இத்தனை நாட்களாக லட்சுமி டாக்டர் அங்கிள் என்று கூறிக் கொண்டிருந்த பாரதிதான் உண்மையான அப்பா என்பதை போட்டுடைக்கிறார். இதனால் வெண்பா உள்ளிட்ட அனைவரும் உறைகின்றனர்.

அனைவரும் அதிர்ச்சி
சௌந்தர்யாவிற்கு நிம்மதி ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் ரியாக்ஷன் ஒருமாதிரி இருக்க லட்சுமியோ அதிர்ச்சி அடைகிறாள். இந்நிலையில் முன்னதாக லட்சுமியிடம் இந்த உண்மையை கூறினால் வருண்தான் அவளின் அப்பா என்று தான் கூறுவேன் என்று பாரதி கூறிய நிலையில், தற்போது அவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

அடுத்தடுத்த ட்விஸ்ட்கள்
கணவன் மனைவி பிரச்சினையில் ஏராளமான ட்விஸ்ட்களுடன் இந்த தொடர் இருந்தாலும் தன்னுடைய மகளுக்கு அவளது அப்பாவை அறிமுகப்படுத்துவதையொட்டி நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தன்னுடைய கணவன் பாரதியை அவருடைய மகளுக்கு கண்ணம்மா அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்து கதையில் ட்விஸ்ட்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











