Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு!

சென்னை: சன் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மாவின் பிடிக்காத கல்யாணம்... சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு!

கண்ணம்மாவின் தன்கைஅஞ்சலியை சவுந்தர்யாவின் இளைய மகன் அகிலன் விரும்ப, அதை நிறைவேற்ற போன சவுந்தர்யா அம்மாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

அஞ்சலியின் வீட்டு வேலைக்காரின்னு முதலில் சொன்னாங்க..பிறகு பார்த்தால் அஞ்சலி அப்பாவின் முதல் சம்சாரத்துக்கு பிறந்தவ இந்த கண்ணம்மான்னு உண்மையை சொன்னாங்க.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

சரி எதுவா வேனா இருக்கட்டுமே இதிலென்ன பிரச்சனைன்னு கேட்கறீங்க. அங்கதானே பிரச்சனை.. கண்ணம்மா அஞ்சலி மாதிரி பளிச் நிறமில்லை. நல்ல கருப்பு. கருபுன்னா சவுந்தர்யா அம்மாவுக்கு அலர்ஜி. தான் பெத்த மகளின் மகள் கருப்புன்னு அவளைத் தொடுவது கூட கிடையாதுன்னா பாருங்களேன்... இந்த நேரத்தில் அம்மாவுக்கு கருப்பு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் பாரதி, கருப்பு கண்ணம்மாவை காதலிக்கிறான்.

அஞ்சலிக்கு பாரதியை

அஞ்சலிக்கு பாரதியை

தனக்குப் பார்த்த தம்பி மாப்பிள்ளை அகிலனைப் பிடிக்கலை அஞ்சலிக்கு.அவன் அண்ணன் பாரதியைத்தான் பிடிச்சிருக்கு.அவனுக்கு லவ் டார்ச்சர் குடுத்துகிட்டே இருக்கா. பாரதிக்கு . தம்பிக்கு நிச்சயதார்த்தம் பண்ணின பொண்ணு, நம்மை காதலிக்கறதா சொல்றாளேன்னு வெறுப்பாகுது. அடிக்கடிப்போன் செய்து, அவனை அருவெறுப்புக்கு உள்ளாக்கறா பாரதி.

கண்ணம்மாவை கல்யாணம்

கண்ணம்மாவை கல்யாணம்

அஞ்சலி பிறந்த நாள்கொண்டாடறேன்னு சொல்லி, உன்னைத்தான் நான் கல்யாணம் செய்துக்க ஆசைப்படறேன்ன்னு சபையில் சொல்லிட போறேன் பாரதி மாமான்னு அஞ்சலி மேலும் வெறுப்பேத்த, அவளுக்கு பதிலடி கொடுப்பது போல கண்ணம்மாவை கல்யாணம் செய்துக்கிட்டு வர்றான் பாரதி. அஞ்சலிக்கு பதிலடியாக இருந்தாலும், சவுந்தர்யா அம்மாவுக்கு பேரிடியா இருக்குது. எனக்கு கறுப்புன்னா ஆகாதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்ணிட்டியேடான்னு சவுந்தர்யா வீட்டுக்குள்ள விட மாட்டேன்றாங்க.

யோகம் கண்ணம்மாவுக்கு

யோகம் கண்ணம்மாவுக்கு

கருப்பு கருப்புன்னு ஏளனம் செய்யப்பட்டே வாழ்க்கையை கடந்து வந்த கண்ணம்மாவுக்கு டாக்டர் பாரதி இப்போ புருஷன்.அது மட்டுமா. .பாரதியின் நண்பர்கள் இந்த தேதியில் சவுந்தர்யா அம்மா வீட்டில் மணமக்கள் வரவேற்பு நடக்க இருக்குன்னு விளம்பரம் குடுத்துடறாங்க. சவுந்தர்யா இந்த விளம்பரத்தைப்பார்த்து அதிர்ச்சியில் இருக்காங்க. வீட்டுக்கு உறவினர்கள் வரத் துவங்க கண்ணம்மாவை வீட்டுக்கு வெளியே எப்படி உட்கார வைப்பதுன்னு அவளை அகிலனும், அவன் அக்காவும் சேர்ந்து உள்ளே அழைச்சுட்டு போக, கண்ணம்மாவுக்கு மகிழ்ச்சி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X